மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன? Jeffersonville, Indiana USA 65-0725E 1இப்பொழுது நாம் தலை வணங்குவோம், பிதாவாகிய தேவனே, நீர் ஜனங்களுக்கு இந்நாளில் செய்வதைக் காணும் போது, அதுவே - எங்கள் உத்தமமான ஜெபமாயுள்ளது. ஆண்டவரே, எங்களுக்கு வெளிப்படும் எழுதப்பட்டுள்ள வார்த்தை உண்மையென்று நாங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று உம்மை வேண்டிக் கொள்கிறோம். பிதாவே, இவைகளை எங்களுக்கு அருள்வீராக. இன்று காலை வேத வாக்கியகளின் பேரில் நீர் அனுப்பின வெளிச்சத்திற்காக இன்றிரவு நாங்கள் உமக்கு நன்றி செலுத்த விரும்புகிறோம். உமது வார்த்தை சத்தியமென்று ஜெப வரிசையில் நீர் உறுதிப்படுத்த வேண்டுமென்று இன்றிரவு ஜெபிக்கிறோம். தேசம் முழுவதிலும் - மேற்கு கடற்கரை உள்ள எல்லா இடங்களிலும், மேலே அரிசோனா மலைகளிலும், இழே டெக்ஸாஸின் சமவெளியிலும், கிழக்கு கடற்கரை வரைக்கும் - ஒலிபெருக்கிகளை சுற்றிலும் கூடியுள்ள சபைக்காகவும், சபையோருக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, தேசம் முழுவதிலும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் கூடியுள்ளனர். நேரத்தில், எங்களுக்கு அநேக மணி நேரங்கள் வித்தியாசமுண்டு. ஆனால், கர்த்தாவே, நாங்கள் ஒரே குழுவாக, விசுவாசிகளாக, மேசியாவின் வருகைக்கு காத்திருக்கிறவர்களாக இன்றிரவு ஒன்று கூடியுள்ளோம். பரலோகப் பிதாவே, அவரை உமது சபைக்கு விரைவில் அனுப்ப வேண்டுமென்று ஜெபிக்கிறோம். இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 2நீங்கள் உட்காரலாம். இன்றிரவு இங்குள்ள அனைவருக்கும் கிறிஸ்தவ வாழ்த்துதல்கள். நமக்கு மூச்சு விட முடியாத அளவுக்கு நாம் அனைவரும் நெருக்கிக் கொண்டிருப்பதற்காக வருந்துகிறேன். 'ஏர் கண்டிஷன்' இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, 'ஏர் கண்டிஷன்' செய்யப்பட்டுள்ள போதிலும், திரளான கூட்டம் இருப்பதால் அதனால் பயனில்லை. சாதாரண அளவில் இச்சபையில் கூட்டம் இருக்குமானால், இந்த 'ஏர் கண்டிஷன்' இயந்திரங்கள் உங்களை உறையச் செய்துவிடும். ஆனால் இங்கு ஒவ்வொருவரும், 'ஏர்கண்டிஷன்' இயந்திரங்கள் பலமாக இயங்கிக் கொண்டிருந்த போதிலும், விசிறிகளை வைத்துக் கொண்டு காற்று வீசிக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் கிழக்கு கரையிலிருந்து மேற்கு கரைக்கு, கேட்டுக் கொண்டிருக்கும் கிறிஸ்துவுக்குள் நண்பர் அனைவருக்கும் வாழ்த்துதல்களை அனுப்புகிறோம். சான் ஜோஸிலுள்ள சகோ. பார்டர்ஸுக்கும் அங்குள்ள அவருடைய குழுவுக்கும் வாழ்த்துதல்களை அனுப்புகிறோம். அரிசோனாவிலுள்ள பிரஸ்காட்டின் மலைகளிலுள்ள சகோ. லீயோ மெர்ஸியருக்கும். அங்கு கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் அவருடைய குழுவுக்கும் வாழ்த்துதல்களை அனுப்புகிறோம். இன்றிரவு டூசானில் குழுமியுள்ள கர்த்தருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறோம். கீழே டெக்ஸாஸிலுள்ள ஹவுஸ்டனில் காத்தருடைய வருகைக்காக காத்திருப்பவர்களுக்கும், மேலே சிக்காகோவில் காத்தருடைய வருகைக்காக காத்திருப்பவர்களுக்கும், கிழக்கு கரையில், நியூயார்க், கனெக்டிக்கட் என்னும் இடங்களில் கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்கும் அந்த பெரிய குழுக்களுக்கும் வாழ்த்துதல்களை அனுப்புகிறோம். அவர்களை இங்கு உட்கார வைக்க போதிய இடம் கிடையாது. எனவே, தொலைபேசியின் வாயிலாக அவர்களுக்கு நாங்கள் வார்த்தையை அனுப்ப வேண்டியதாயுள்ளது. கிளார்க்ஸ் வில்லிலுள்ள சகோ. ஜுனியர் ஜாக்ஸனுக்கும் அவருடைய குழுவுக்கும் இன்றிரவு வாழ்த்துதல் களை அனுப்புகிறோம். மலையிலுள்ள சகோ. ரட்டலுக்கும், கர்த்தருடைய வருகைக்காக காத்திருக்கும் அவருடைய குழுவுக்கும் வாழ்த்துதல்களை அனுப்புகிறோம். இன்றிரவு வீட்டு சபையில், கூடாரத்தில், கர்த்தருடைய வருகைக்கு காத்திருக்கும் நாங்கள் கூடியுள்ளோம். 3இன்று காலை நடந்த ஆராதனைக்கு உங்களில் அநேகர் வந்திருக்க மாட்டீர்கள். அப்படி வராத ஒவ்வொருவரும், அந்த ஒலிநாடாவை வாங்குவீர்களென நம்புகிறேன் (கடைசி காலத்தில் ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளவர்கள்'' - ஆசி.) ''ஐயன்மீர் இதுவா சமயம்?'' என்னும் செய்தி பிரசங்கிக்கப்பட்ட முதற்கொண்டு, இதுவே சபைக்கு அளிக்கப்படும் மிகவும் ஒளிவு மறைவில்லாத செய்தியாகும். நான் ஆவியின் அபிஷேகத்தை உணர்ந்தவனாய், நான் கூறினதைக் கூற ஏவப்பட்டேன். கர்த்தர், தமது வார்த்தையின் மூலம், நாம் எந்த மணி நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை காண்பித்தார் என்று எண்ணுகிறேன். நடந்து வருகிற பரம ரகசியமான காரியங்களை நாம் அறிந்துகொள்ள நிச்சயமுடையவர்களாயிருப்போம். ''ஞானவான்கள் விளங்கிக் கொள்வார்கள்'' என்று வேதம் கூறுகின்றது. ஆனால் தேசங்சளும், ஜனங்களும் பெலவீனமடைந்து அறிவில் பெருகுவார்கள். சற்று யோசித்து பாருங்கள், நடுத்தர வயதுள்ள- ஏறக்குறைய இருபது வயதுள்ள - அமெரிக்கன் பெலத்தில் குறைந்து, அறிவில் பெருகியிருக்கிறான். முன் காலங்களில் ஜெட் விமானங்களும் அணு போராயுதங்களும் இருக்க வில்லை, ஆனால் அக்காலத்தவர் நீண்ட காலம் வாழ்ந்தனர். ஆனால் நாமோ பெலவீனமடைந்து, அறிவில் பெருகி வருகின்றோம். நமது அறிவே நம்மை அழிக்கப் போகின்றது. நாமே நம்மை அழித்துக்கொள்ளப் போகின்றோம். தேவன் நம்மை அழிக்கப் போவதில்லை. அது எப்பொழுதுமே அவ்வாறு இருந்து வந்துள்ளது. இனிமேலும் அது அவ்வாறே இருக்கும். 4கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு எதைக் குறித்து பேசுவேன் என்று தெரியாது. ஆனால் ஒன்றும் நேரிடாமல், அவர் நம்மை உயிர் வாழ அனுமதித்து, அவருடைய சித்தமாயிருக்குமானால், அடுத்த ஞாயிறு காலை நாம் வேறொரு செய்தியைப் பிரசங்கித்து, அடுத்த ஞாயிறு இரவன்று வியாதியஸ்தர்களுக்காக ஜெயிப்போம். பிறகு என் குடும்பத்துடன் அரிசோனாவுக்குத் திரும்பிச் சென்று, என் பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது, என் மேல் விழுந்த கடமையாயுள்ளது. அப்பொழுது நீங்கள்... கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்படும். போது, எங்களால் கூடுமானவரை உங்களுக்கு அறிவிப்போம். அவை நடக்கவிருக்கும் நாட்களையும்... எந்தெந்த இடங்களில் நாங்கள் வைக்காத்தனித்துள்ளோம் என்பதை. தேவன் உங்கள் அனைவரையும் ஆசிர்வதிப்பாராக. இன்றிரவு நேரமாகிவிட்டதென்று அறிந்தவனாய்... தொடங்கும் போதே பதினைந்து நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. ஜெபர்ஸன்வில்லில் இப்பொழுது எட்டு மணிக்கு பதினைந்து நிமிடங்கள் உள்ளன. கிழக்கு கரையில் ஏறக்குறைய, ஒன்பது மணிக்கு பதினைந்து நிமிடங்கள் இருக்கும். மேற்கு கரையில் இப்பொழுது ஐந்துமணி. இங்கு சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆவியின் அபிஷேகத்தை அறிந்து கொள்ள ஒரு சிறு பிரசங்கத்தை செய்ய விரும்புகிறேன். அதன் பிறகு நாம், ஜெப வரிசையை அழைப்போம். 5இங்குள்ள சபையோர்; மற்ற இடங்களில் கூடியுள்ள சபையோர் ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுள்ள யாராகிலும் ஒரு சகோதரனைக் கண்டுபிடித்து, நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும் அந்த நேரத்தில், உங்கள் சபையோரின் மத்தியில் காணப்படும் வியாதியஸ்தர் மேல் அவர் கைகளை வைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். தேவன் எங்கும் பிரசன்னமாயிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவர் எல்லாவிடங்களிலும் இருக்கிறார். எனவே டெக்ஸாஸ், கலிபோர்னியா, அரிசோனா' நீங்கள் எங்கிருந்தாலும், நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கத் தொடங்கும் போது, அங்குள்ள வியாதியஸ்தர் மேல் கைகளை வையுங்கள். தேவன் ஜெபத்தைக் கேட்டு அதற்கு பதிலளிப்பார் என்னும் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். சென்ற ஞாயிறன்று ஒரு வினோதமான சம்பவம் நடந்தது. அபிஷேகத்தினால் பகுத்தறிவின் வரம் கிரியை செய்து கொண்டிருந்தது. பரிசுத்த ஆவி... அது வினோதமான ஒன்று. சென்ற முறை நான் இங்கு வந்திருந்த முதற்கொண்டு, அநேக மாதங்களாக பகுத்தறிந்து கூறும் வரிசையை நான் அமைக்கவில்லை. ஒரு வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் அங்கு நடந்து சென்று... அவர் செய்வாரா என்று நமக்குத் தெரியாது. அவர் செய்வாரென்று நிச்சயமாகக் கூற முடியாது. நாம் அங்கு சென்று காத்திருக்க வேண்டும். அவர் இராஜாதி பத்தியம் உள்ளவர் (Sovereign). அவர் செய்ய விரும்புவதைச் செய்வார். அங்கு நின்று கொண்டு, அவர் என்ன செய்வாரென்று காணக் காத்திருக்க வேண்டும். பிறகு அது என் மேல் இறங்கி கிரியை செய்கிறது. 6கூட்டத்தின் முடிவில், அது யாரென்று அறியாதவனாய்; வரிசையில் ஓரிடத்தில் உயரமும், வழுக்கை தலையும் கொண்ட ஒரு மனிதன் இருந்தார். அவர் மிகவும் வியாதிப்பட்டிருந்தார். முடிவில் மேடையின் மேல் ஒரு மனிதன் தோன்றினார். அவர் தலை குனிந்திருந்தார். அவர் அதிகமாக அவதியுறுபவர் போல் காணப்பட்டது. அவர் வலி தாங்காமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டிருந்தார். இவர் நான் ஜெபித்த முதலாம் மனிதன் அல்லது இரண்டாம் மனிதன் அல்லவா என்று எண்ணினேன். ஏனெனில், அவரும் வழுக்கை தலை கொண்டவராய், தலை குனிந்திருந்தார்; பெரிய உருவம் கொண்டவர், குனிந்திருந்தார். நான் சுற்று முற்றும் பார்த்த போது, அந்த மனிதர் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்தார், ஆனால் களிகூர்ந்து கொண்டிருந்தார். ''அது எங்கே?'' என்று நான் நினைத்தேன். அது எங்கேயென்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. அதை என்னால் உணர முடிந்தது, அந்த மனிதனை என் முன்னால் காண முடிந்தது. அது என்னை இந்த பக்கமாக இழுப்பதைக் கண்டேன், அது பின்னாலிருந்து வந்து கொண்டிருந்தது. நான் சகோ. நெவில்லையும், இந்த இருவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதையும் கண்டேன், அது அவர்களல்ல. நான், ''அந்த மனிதன் ஞானஸ்நான அறைக்குள் இருக்கிறார்'' என்றேன். அது யார் தெரியுமா? சகோ. ஷெபர்ட், அவரை நான் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத காரணம், அவர் பின்னால் தலை குனித்தவராய் உட்கார்ந்து கொண்டு ஜெபித்துக் கொண்டிருந்தார். அவர் மரித்து விடுவார் என்று கடந்த சில வாரங்களாக நினைத்துக் கொண்டிருந்தார். அவருடைய மனைவி அவரிடம் ஒரு புதிய ஜோடி காலணிகளை வாங்கிக்கொள்ள கூறின போது, அவர், ''அவை எனக்கு அவசியமில்லை. அவ்வளவு நாட்கள் நான் உயிரோடிருக்க மாட்டேன்'' என்றார். 7அன்று அவர் சகோ. உட்டின் வீட்டின் முற்றத்தில் என்னை சந்தித்த போது, அவர் கூச்சலிட்டு தேவனைத் துதித்தார். அவர், ''நான் பன்றி இறைச்சி, முட்டை, தக்காளி, எனக்கு விருப்பமான எல்லாவற்றையும் இப்பொழுது உண்கிறேன்'' என்றார். அவர் தாழ்மையுடன் தன் இருக்கையை விட்டு எழுந்து வெளியே உள்ள ஒரிடத்திற்கு சென்று ஜெபித்துக் கொண்டிருந்தார். பாருங்கள், உங்களுக்கு ஜெப அட்டை அவசியமில்லை. உங்களுக்கு விசுவாசம் மத்திரமே அவசியம். பாருங்கள்? நீங்கள் சுகமடைந்து விட்டீர்களா இல்லையாவென்று கூட எனக்குத் தெரிவதில்லை. நான், ''ஒரு மனிதன் ஜெபித்துக் கொண்டிருக்கிறார், அவருக்கு ஏதோ கோளாறு உள்ளது'' என்று கூறினேன். என்ன கோளாறு என்று அது கூறினதென்று நினைக்கிறேன். ''வயிற்று வலி. பின்னால் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். கர்த்தராகிய இயேசு உம்மை சுகப்படுத்துகிறார்'' என்கிறேன். அவ்வளவு தான் என்னால் கூற முடியும். இழுப்பு என்னவென்றால், அவர் ஜெபித்துக் கொண்டிருந்தார். அதை என்னால் காண முடிகின்றது. ஆனால், என்ன நடக்கிறதென்று எனக்குத் தெரிவதில்லை. பாருங்கள்? ஆனால் அது வருவதை நீங்கள் கண்டு, அது ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று கூறும் போது, பேசுவது நானல்ல, அது அவர் என்று நீங்கள் எல்லோரும் அறிந்திருக்கிறீர்கள். 8ஆனால் நான் எப்பொழுதுமே, ''இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்கினார்'' என்று கூறுவது வழக்கம். அது முற்றிலும் உண்மை. ''நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.'' பாருங்கள்? பாருங்கள்? ஆனால் அது. ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்பதாக இருந்து, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றும், என்ன நடக்குமென்றும் உங்களிடம் கூறுமானால், அதை கவனியுங்கள், அது அப்படியே நடக்கும். ஆனால் நான், ''இயேசு உன்னை சுகப்படுத்தி, முற்றிலும் குணமாக்கி விட்டார்'' என்று கூறும் போது. நீ அதை விசுவாசிக்கிறாய், ஏனெனில் அவர் ஏற்கனவே அதை கூறிவிட்டார். அவர் கூறினதை நான் மறுபடியும் கூறுகிறேன். தரிசனம் என்பது அவர் காண்பித்ததை எடுத்துரைப்பது. உங்களுக்குப் புரிகின்றதா? 9இப்பொழுது நாம் வேகமாக வார்த்தைக்குச் செல்வோம். ஏனெனில், இங்குள்ள உங்களில் அநேகர் இன்றிரவு நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டும். தேவன் தாயே உங்களை ஆசிர்வதித்து, உங்களுக்கு தவி செய்து, சாலைகளில் உங்களைப் பாதுகாப்பாராக என்று ஜெபிக்கிறேன். இன்றிரவு பரி. மத்தேயு, 21ம் அதிகாரத்திற்கு வேதாகமத்தை திருப்பி, 1 முதல் 11 வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். வேதாகமம் உங்களிடம் இல்லாமல், இந்த வேத வாக்கியங்களைக் குறித்துக் கொள்ள விரும்பினால், சரி. 10இன்று காலை அளிக்கப்பட்ட செய்தியைக் கேளாதவர், உங்களிடம் ஒலிப்பதிவுக் கருவி இருக்குமானால்; ஒலி நாடாக்களை விற்பதற்காக நாங்கள் விளம்பரம் செய்வதில்லை. எதையுமே நாங்கள் விற்பனை செய்ய முயல்வதில்லை. சில பெரிய கூட்டங்களில், சில புத்தகங்கள் விற்பனைக்காக உள்ளன என்று அவர்கள் அறிவிப்பார்கள், அதன் மூலம் நாங்கள் எந்த இலாபத்தையும் சம்பாதிப்பதில்லை. சகோ. வேயில் அந்த புத்தகத்தை எழுதுகிறார். ஒலி நாடாக்களை ஒலிப்பதிவு செய்து விற்பவர், ஒலிநாடாக்களின் மூலம் நாங்கள் பணம் சம்பாதிப்பதில்லை யென்பதை உங்களிடம் கூறுவார். நாங்கள், ''ஒலிநாடாக்கள்'' என்று நினைப்பதில்லை - செய்தி தான் முக்கியம் வாய்ந்தது. செய்திகளை ஒலிப்பதிவு செய்பவர் அதைக் கொண்டு இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டிருப்பாரானால், அவரை ஒலிப்பதிவு செய்ய அனுமதிக்க மாட்டோம். அது உண்மை. அதைக் குறித்து நான் விசாரித்தேன். நமது ஒலி நாடாக்கள் ஐந்துடாலர்களுக்கும் குறைவாக விற்கப்படுகின்றன - மூன்று முதல் ஐந்து டாலர்கள் வரை. என்ன சொல்கிறீர்கள்? மூன்று நான்கு டாலர்கள் - நீளமான ஒலி நாடாக்களுக்கு. ஒரு போதகரை அவருடைய ஒலிநாடாவைக் குறித்து நான் விசாரித்த போது, இருபது, முப்பது நிமிடங்களுக்கு அளிக்கப்படும் செய்தியடங்கிய ஒலிநாடாவின் விலை ஒன்பது டாலர்கள் என்றறிந்தேன். 11எனவே, பின்னாலுள்ள நமது சகோ. சாத்மன், அல்லது அவர்கள் யாருமே, இந்த ஒலி நாடாக்களின் விற்பனையின் மூலம் பணக்காரர் ஆகவில்லை. பாருங்கள், அதை நடத்துவதற்கு போதிய அளவு சம்பாத்தியம் அவர்கள் பெறுகின்றனர். இலவசமாக அதை செய்யும்படி அவர்களிடம் கூற முடியாது. ஏனெனில், அவர்கள் ஒலிநாடாக்களை வாங்குவது போன்றவைகளைச் செய்ய வேண்டும், ஒலிப்பதிவு செய்யும் இயந்திரத்தின் விலை மிகவும் அதிகம். அதன் விலை சுமார் பத்தாயிரம் டாலர்கள் ஒலிப்பதிவு செய்வதற்காக அவர் தொடக்கத்தில் செலவிட வேண்டிய தொகை மிகப் பெரியது. நான் கேள்விப்படுகிறேன், விரைவில்... அவர்கள் அதை இன்னும் அறிவிக்கவில்லை. இலிப்பதிவு செய்வதற்கான ஏலம் மறுபடியும் இருக்கும். அடிக்கடி நாம்... தர்மகர்த்தாக்கள், எனக்கு அதனுடன் யாதொரு தொடர்பும் கிடையவே கிடையாது. நான் அந்த கூட்டங்கள் ஒன்றிலும் கூட கலந்து கொள்வதில்லை - சார்பாகவும் எதிராகவும் இல்லை. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் தங்கள் தொகையை அறிவிக்கின்றனர். அதை அனுசரித்து, அடுத்தபடியாக யார் ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்பதை கர்த்தாக்கள் தீர்மானித்து, அவருக்கு கடிதம் அனுப்புகின்றனர். அவ்வளவுதான் எனக்கு அதைக் குறித்து தெரியும். அவர்கள் அதை கவனித்துக் கொள்கின்றனர். எனக்கு குழந்தைகளை பிரதிஷ்டை செய்யவோ, ஞானஸ்நானம் கொடுக்கவோ நேரமிலாதிருக்கும் போது, இதில் ஈடுபடவே முடியாது. 12எனது சிந்தை இந்த செய்தியில் செலுத்தப்பட்டுள்ளது. அது அந்த மூன்றாம் இழுப்பு. அதற்கு நான் விசுவாசமுள்ளவனாகவும், பயபக்தியாயும் இருக்க வேண்டியது அவசியம். மத்தேயு;21:1 முதல் 11, நீங்கள் கவனிக்க வேண்டும், அல்லது வேதாகமத்தை திருப்ப வேண்டும் என்பதற்காக கூறுகிறேன்: அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்நேயுக்கு வந்த போது, இயேசுவானவர் சீஷரில் இரண்டு பேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும், அதனோடே ஒரு குட்டி பையும், கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டு வாருங்கள். ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கன்; உடனே அவைகளை அனுப்பி விடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும், கழுதைக் குட்டியாகிய மறியின் மேலும் ஏறிக் கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று, தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது. நிறைவேறும் படி இதெல்லாம் நடந்தது. சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து கழுதையையும், குட்டியையும் கொண்டு வந்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகனைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். முன் நடப்பாரும், பின் நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள். மத்;21:1-1. ஜெப வரிசை தொடங்குவதற்கு முன்பாக, இதிலிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு முப்பது நிமிடங்கள் பேச விரும்புகிறேன். பொருளுக்கு, ''மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன?'' என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 13அது களைப்பும், பயமும் கொண்ட நாளாகவும், அசாதாரணமான நாளாகவும் இருந்தது. பஸ்காவில் கலந்து கொள்ள இயேசு ஆயத்தத்துடன் எருசலேமுக்கு வருவதை நாம் காண்கிறோம். பஸ்காவில் தான் பஸ்கா ஆடு பலியிடப்பட்டு, ஜனங்களின் பாவ நிவர்த்திக்காக இரத்தம் கிருபாசனத்தின் மேல் தெளிக்கப்பட்டது. அவர் பெத்பகேயுவிலிருந்து ஒலிவ மலையின் மேல் வந்தார். அது எருசலேம் கட்டப்பட்டுள்ள சிறு குன்றுக்கு உயரே உள்ளது. அவர் அங்கிருந்து எருசலேமை நோக்கின போது, அதுவே அவருடைய கடைசி விஜயம் என்பதை அறிந்திருந்தார், அவர் பாவிகளின் கைகளில் ஒப்பு கொடுக்கப்பட்டு, அவர்களால் கொல்லப்பட வேண்டிய நேரம் அதுவே. மானிடர் ஒருபோதும் மரிக்காத அத்தகைய கொடூர மரணம் அவர் எய்தி, அடக்கம் பண்ணப்படுவார், அவருக்கு சொந்தமானவர்களால் - அவருடன் கூட இருந்த சிலரால் - அவர் காட்டிக் கொடுக்கப்படுவார். அவர் தேவனாதலால், அவர்களுடைய இருதயங்களில் என்ன இருந்தது என்பதை அறிந்தவராய், அவரைக் காட்டிக் கொடுக்கப் போகிறவன் யாரென்பதை தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்தார். அவருடன் கூட இருந்து, அவர் பக்கத்தில் அமர்ந்து, அவருடைய பணத்தை எண்ணின அந்த மனிதன் அவரைக் காட்டுக் கொடுப்பான் என்று அவர் அறிந்திருந்தார். கொடூரமான ரோம சிலுவை அவருக்காக காத்துக் கொண்டிருந்தது என்பதையும் அவர் அறிந்திருந்தார். அவருடைய சரீரத்திலுள்ள தண்ணீரும், இரத்தமும் பிரிந்து, இரத்தம் வியர்வையைப் போன்று பெருந்துளிகளாக அவருடைய நெற்றியிலிருந்து விழும் என்று அவர் அறிந்திருந்தார். இவையனைத்தும் அவருக்கு முன்பாக இருந்ததென்று அவர் அறிந்தவராய் ஒலிவ மலையின் மேல் நின்று கொண்டு எருசலேமை நோக்கினார். 14அக்காலத்து ஜனங்கள்... ''மேலான மார்க்கத்தைச் சேர்ந்த வகுப்பினர்'' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டவர்கள் அவரை வெறுத்தனர். அக்காலத்திலிருந்த சபைகள் அவரை வெறுத்து அவரை தூஷித்து, அவருக்கு செவி கொடுத்தவர்களையும் தூஷித்தன. அவருடைய கூட்டங்களுக்கு அவர்கள் சென்றால் அவர்கள் உடனடியாக சபையின் ஐக்கியத்திலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டனர். அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை (யோவான்;1:11) என்று வேதம் கூறுவதில் வியப்பொன்றுமில்லை. அவரை நேசிக்க வேண்டியவர்கள், அவருடன் கூட இருக்க வேண்டியவர்கள், அவருடைய பகைஞராகி விட்டனர். 15ஏழை மக்களிலிருந்து அவர் தம்முடைய சிறு குழுவை அமைத்துக் கொண்டார் - மீன் பிடிப்பவர், சுங்கம் வசூலிப்பவர், படிப்பில்லாதவர் போன்றவர். இவர்களில் சிலர், ''படிப்பறியாதவர்கள், பேதமையுள்ளவர்கள்'' என்று வேதம் கூறுகின்றது (அப்;4:13). சிலருக்கு தங்கள் பெயர்களை கையொப்பமிடவும் கூட தெரியவில்லை. தமது ஜனங்களைப் பெற அவர் சபைகளுக்குச் செல்லவில்லை. அவர் சபை தலைவர்களுடன் ஒருபோதும் இணங்கவில்லை, அது மாத்திரமல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசியின் போக்கைப் பினபற்றினார். அவருக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகள் செய்தது போலவே, அவர் அவர்களுடைய செய்கைகளைக் கடிந்து கொண்டார், ஏனெனில் தீர்க்கதரிசிகள் வார்த்தையின் ஒரு பாகமாக இருந்தனர். இவர் வார்த்தையின் பரிபூரணமாயிருந்தார். 16ஆனால் இவையனைத்தின் மத்தியில், ஒவ்வொரு காலத்திலும், அந்த செய்தியை ஏற்றுக்கொள்ள முன்குறிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார் இருப்பார்கள். அவர்கள் அதை பின்பற்றுவார்கள். அவர்கள் திரளான கூட்டங்களை அசட்டை செய்வார்கள். அவிசுவாசியின் குற்றச்சாட்டுதன் அவர்கள் அசட்டை செய்வார்கள். அவர்களுடன் அவர்கள் வீண் வாதம் செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு செய்ய வேண்டிய காரியம் ஒன்றுண்டு; அது, அதன் ஒவ்வொரு பாகத்தையும் விசுவாசித்து, இயேசுவின் பாதத்தில் உட்கார்ந்த மரியாளைப் போன்று அதை இருதயத்தில் பதித்துக் கொள்ளுதலே. மார்த்தாள் இயேசுவுக்கு உணவு சமைத்துச் கொண்டிருந்தாள். இயேசு அவளிடம், “மார்த்தாளே, நீ உலக காரியங்களைக் குறித்து கவலை கொள்கிறாய், ஆனால் மரியாளோ மேலான பங்கை தெரிந்து கொண்டாள்'' என்றார் - நித்திய ஜீவனுக்குரிய காரியங்களை. 17அதை புரிந்த கொண்ட மக்களில் பலர்... இன்றுள்ளது போல அக்காலத்தில் அச்சடிக்கப்பட்ட பிரதிகள் கிடையாது, அவர்களுக்கு தொலைகாட்சியோ, தொலைபேசியோ எதுவும் அக்காலத்தில் இருக்கவில்லை. ஆனால், அவர் பஸ்கா பண்டிகையின் போது இருப்பார் என்னும் செய்தி பரவினது. ஜனங்கள் அநேகர் ஆவிக்குரிய சிந்தை கொண்டிருந்ததால், அவரே பஸ்கா ஆட்டுக் குட்டி என்பதை அறிந்திருந்தனர். ஏனெனில், நடக்கப்போகும் சாரியங்களை அவர் ஏற்கனவே அவர்களிடம் கூறியிருந்தார். 18அவர் வருவாரென்று அவர்கள் அறிந்து, அவர்கள் அவரை அவ்வளவாக நேசித்ததனால், அவருக்காக காத்திருந்தனர். ஜனக்கூட்டம் தள்ளிக்கொண்டும், நெருக்கிக் கொண்டும், ஒரு வாசலிலிருந்து மறு வாசலுக்குச் சென்று, அவர் எந்த நேரத்திலும் வருவாரென்று ஆவலுடன் காத்திருந்தனர். மற்றவர்களோ, ஜனங்கள் ஒரு வாசலிலிருந்து மறுவாசலுக்கு ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்புற்று, ''கவர்ச்சி என்ன?'' என்றனர். அவர்கள் இந்த பக்கமும், அந்த பக்கமும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் ஏதோ ஒன்று நடக்கப் போகிறதென்று எதிர்பார்த்தவர்களைப் போல் காணப்பட்டு, ஏதோ ஒன்றிற்காக நோக்கிக் கொண்டிருந்தனர். சில நிமிடங்களுக்கு என் பொருளை மாற்றிக் கொண்டு இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது என்று கூற விரும்புகிறேன் ஜனங்கள் அவருடைய வருகையை ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கின்றனர். இறுக்கத்தை நம்மால் உணர முடிகின்றது. அவர்கள் தேடிக் கொண்டும், ஒவ்வொரு அசைலையும் அடையாளத்தையும் கவனித்துக் கொண்டும், அதை வேத வாக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டும் இருக்கின்றனர். 19அவரைக் குறித்து முன்னுரைக்கப்பட்டுள்ள அனைத்தையும் அவர்கள் கடைசி வரைக்கும் கண்டு, முடிவு அருகாமையிலுள்ளது என்பதை அறிந்திருந்தனர். அவர்கள் அங்கே இருக்க விரும்பினர், எனவே அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் ஒரு பாகம் - சிறுபான்மையோர் - அவரை ஆதரித்தது, அவர்களில் பெரும்பாலோர் - தொண்ணூறு சதவிகிதம் - இவருக்கு விரோதமாயிருந்தனர். இன்றைய மார்க்க சம்பந்தமான ஜனக்கூட்டமும் அவ்வாறேயுள்ளது. வார்த்தையும், கிறிஸ்துவும் என்னும் நிலைக்கு உண்மையில் வரும்போது, அதை சுவாசிப்பவர் ஒரு சதவிகிதம் மாத்திரமே. மற்றவர்களோ அதைக் குறித்து எவ்வித கவனமும் செலுத்துவதில்லை, என்ன அற்புதங்கள் நடந்தாலும், அதை அவர்கள் தமாஷாக எடுத்துக் கொண்டு, கதவை படாரென்று மூடி விடுகின்றனர். அதேவிதமாகத் தான் உள்ளது. காலப்போக்கில் காரியங்கள் அதிகம் மாறுவது கிடையாது. சரித்திரம் தன்னையே மறுபடியும் படைத்துக் கொள்கிறது. 20அது ஒரு பயமுள்ள இறுக்கத்தை உருவாக்கியது என்று நாம் காண்கிறோம். அது அப்படித்தான் செய்ய வேண்டும். அவர்கள் காத்திருந்தனர், அவர் அங்கு வந்து என்ன செய்யப் போகினறார் என்று வியந்தனர். அவர் என்ன செய்தாலும், அதன் பலனைப் பெற அவர்கள் அங்கிருக்க விரும்பினர். அவர்களுக்கு அது தேவையாயிருந்தது. அவர்கள் அதைக் காண விரும்பினர். அவர்கள் அவரை விசுவாசித்தனர். மற்றவர்கள் அவர் வரப்போகிறார் என்று கேள்விப்பட்டு, அவரைக் கேலி செய்ய அங்கு சென்றனர். எனவே, பயத்துடன் கூடிய எதிர்நோக்குதலுக்குப் பின்பு, அது மிகவும் அசாதாரணமான நாள், மிகவும் சாதாரணமான நேரம் சபைகள் உறங்கிக் கொண்டிருக்கின்ற, ஜனங்களின் பயம் அதிகரித்திருந்தது, அங்கு திரளான ஜனங்கள் குழுமியிருந்தனர், அதன் பின்பு அது சம்பவித்தது. 21ஓலிவ மலையின் மேலிருந்து ஒரு சிறு வெள்ளை கழுதை கீழே வந்து கொண்டிருந்தது. ஒரு கூட்டம் ஜனங்கள் மதவெறி கொண்டவர்கள் போல் சத்தமிட்டுக் கொண்டு, மரங்களிலிருந்து பன ஓலைகளைப் பறித்தும், தம் சுள் துணிகளை வழியில் விரித்தும், “கர்த்தரில் நாமத்தினாலே வருகிறவரான தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா'' என்று ஆரவாரம் செய்தனர். இந்த சிறு கழுதையின் மேல் சவாரி செய்து வந்தவர், அந்நேரத்துக்கென தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியாவேயன்றி வேறுயாருமில்லை. அப்பொழுது தேவன் என்ன செய்து கொண்டிருந்தார்? அந்த மலையின் மேலிருந்த கவர்ச்சி என்ன? தேவன் சரித்திரம் உண்டாக்கி, தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். இது எப்பொழுதுமே கவர்ச்சி உண்டாகக் காரணமாயுள்ளது. அது குற்றம் கண்டு பிடிப்பவர்களையும், வல்லூறுகளையும் (இன்று காலை அளித்த செய்தி), அதே சமயத்தில் கழுகுகளையும் கொண்டு வருகின்றது. பாருங்கள்? என்ன நடக்கிறதென்பதை அறிய அவர்கள் ஒன்று கூடுகின்றனர். சிலர் அறிந்துகொள்ள ஆவல் கொண்டவர்களாகவும் (curiosity), சிலர் குற்றம் கண்டு பிடிக்கவும், மற்றவர் விமரிசனம் செய்யவும் வருகின்றனர். எல்லா வகையானவர்களும் ஒன்று கூடுகின்றனர். இன்று காலை நாம் கூறினது போன்று: விசுவாசிகள், பாவனை விசுவாசிகள், அவிசுவாசிகள் அனைவரும். மலையின் மேல் என்ன நடந்து கொண்டிருக்கிறது? தீர்க்கதரிசனம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. என்ன நடக்கிறதென்று நாம் பார்ப்போம். 22சகரியாவின் புத்தகம் 9ம் அதிகாரம், 9ம் வசனம், தீர்க்கதரிசிகளில் ஒருவனாகிய சகரியா ஆவியில் இவ்வாறு கூறினான்: சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, செம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின் மேலும் கழுதைக் குட்டியாகிய மறியின் மேலும் ஏறிவருகிற வருமாயிருக்கிறார். ஆனால் வேதபாரகருக்கு என்ன நேர்ந்தது? ஆசாரியர்களுக்கு என்ன நேர்ந்தது? மத சார்பு கொண்ட மக்களுக்கு என்ன நேர்ந்தது? இச்சட்டவம் நிகழ்வதற்கு நானூற்று எண்பத்தேழு ஆண்டுகட்கு முன்பே, இது உறுதிப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசியால் எழுதி வைக்கப்பட்டு, வேதாகமம் என்றழைக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் சுருள்களில் இடம் பெற்றிருந்தது. அது தீர்க்கதரிசனம் நிறைவேறுதல் என்பதை அவர்களால் ஏன் காண முடியவில்லை? இன்றைக்கு அவர்களால் காண முடியாத அதே காரணம் தான். அவர்கள் உபதேசத்துக்குப் பதிலாக மனிதருடைய பாரம்பரியங்களை ஜனங்களுக்குப் போதித்து, தேவனுடைய வார்த்தையை வியர்த்தமாக்கினர். வேதபாரகரும், போதகர்களும், ஊழியக்காரரும், ஆவிக்குரியவர்களும் (அவ்வாறு அழைக்கப்படுபவர்கள்), அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும், வேதத்தை மாத்திரம் படிப்பார்களானால், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறித்து வியப்படைய மாட்டார்கள், அது என்னவென்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். அது தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுதலாம். 23சரித்திரம் உண்டாகிக் கொண்டிருந்தது. தீர்க்கதரிசனம் நிறைவேறிக் கொண்டிருந்தது. உலகிற்கு இரட்சிப்பு வந்து கொண்டிருந்தது. எல்லா தீர்க்கதரிகளும் எதிர் நோக்கியிருந்த அந்த மகத்தான நாள் வந்து கொண்டிருந்தது. கல்லறைகளிலிருந்த அனைவரும் அந்த நாளை எதிர் நோக்கியிருந்தனர் (அது உண்மை. சற்று சிந்தித்துப் பாருங்கள்!) மரித்தோர் அனைவரும் - அதாவது தங்கள் இரத்தத்தை சிந்தி இரத்த சாட்சிகளாக மரித்த நீதிமான்களும், தீர்க்கதரிசிகளும். அப்பொழுது அவர் அவ்வாறு தான் கூக்குரலிட்டார்: ''எருசலமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தளை தரமோ, உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று.'' (மத்.23:37) 24கல்லறையிலுள்ளவர் - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு எல்லா தீர்க்கதரிசிகளும் - இந்த நேரத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், சபையோ அதற்கு குருடாயிருந்தது. ''யார் இப்படி இரைச்சல் உண்டாகக் காரணமாயுள்ளது? ஒரு சமயம் அவ்வாறு கூறின அந்தமனிதன் யார்? இவன் இங்குள்ள தச்சனின் குமாரன் அல்லவா? அவனை எங்களுக்குத் தெரியுமே. அவனுக்கு எங்கிருந்து இந்த ஞானம் வந்தது? அவன் நமது வேதபள்ளிகள் ஒன்றுடன் கூட தொடர்பு கொண்டுள்ளதாக நாம் காணவில்லையே. அவன் எந்த புத்தகத்தையும், படித்ததாகவும் தெரியவில்லை. அவன் யார்?'' என்றனர். அவர் தீர்க்கதரிசி உரைத்த தீர்க்கதரிசனத்திற்கு விடையாக அமைந்திருந்தார். அவர் அந்த கழுதைக் குட்டியின் மேல் சவாரி செய்து இதோ வருகிறார். கவர்ச்சி என்ன? தேவன் தாம் வாக்குத்தத்தம் செய்த வார்த்தையை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். அந்த நேரத்துக்காக நாலாயிரம் ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தனர். ஆதியாகமம் 3ம் அதிகாரம் 15ம் வசனத்தில் தேவன், ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்குவார்; ஆனால், அவனோ அவர் குதிங்காலை நசுக்குவான் என்று முன்னுரைத்தார். இந்த மனிதன் வரப் போகிறாரென்று அந்த தீர்க்கதரிசனம் தொடங்கி வழிவழியாக அநேக தீர்க்கதரிசனங்கள் வேதத்தில் முன்னுரைக்கப்பட்டுள்ளன. 25அண்மையில் அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி தோன்றினான். அவன் தான் உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியாகிய சகரியா. அவன், ''எருசலேம் குமாரத்திகளே, சீயோன் குமாரத்திகளே; களிகூருங்கள், கெம்பீரியுங்கள், சத்தமிடுங்கள். உங்கள் ராஜா சாந்தகுணமுள்ளவராகவும், தாழ்மையுள்ளவராகவும் கழுதைக் குட்டியின் மேலேறி உங்களிடம் வருகிறார்'' என்றான். ஆனால், ஒவ்வொரு நாளும் வேதாகமத்தை தவறாமல் படித்து வந்தவர்கள் அவர் சவாரி செய்து வருவதைக் கண்டு, ''இவர் யார்?'' என்றனர். பாருங்கள்? தேவன் தமது வார்த்தையை ஜனங்களுக்கு நிறைவேற்றி தந்தார். அது என்னவென்று அவர்கள் அறிந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களோ அறியவில்லை. தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றும் போது, அது எப்பொழுதுமே கவர்ச்சியுண்டாக்குகிறது - எப்பொழுதுமே, ஏனெனில் அது வழக்கத்திற்கு மாறான ஒன்று. அவர் தமது வார்த்தையை நிறைவேற்றும் போது, அந்நாளின் நவீன போக்குக்கு அது மாறாக அமைந்துள்ளது. எனவே, அந்நாளின் நவீன போக்கு அதை நம்புவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த வழியைப் பின்பற்றுகின்றனர். 26இப்பொழுது, நாம் காண்கிறோம்... நாம் வேதத்திற்கு சென்று இன்னும் சில நிமிடங்களுக்கு, தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றின போது, வழக்கத்திற்கு மாறாக அமைந்திருந்த வேறு சில சம்பவங்களைப் பார்ப்போம். இவன் ஒன்றைக் கூறுவாரானால், அவர் அதை நிறைவேற்றியே தீருவார். வானமும், பூமியும் ஒழிந்துபோம், ஆனால் அந்த வார்த்தையோ ஒருபோதும் ஒழிந்து போகாது. எனவே, அது நிறைவேறும் போது, அது ஒரு வழக்கத்திற்கு மாறான காட்சியை தோற்றுவிக்கிறது. தேவனுடைய வார்த்தையை. விகவாசிப்பதாக கருதப்படும் ஜனங்களுக்கு தேவனுடைய வார்த்தை எவ்வளவு கேலித்தனமாயுள்ளது என்பதை கவனியுங்கள். ஆயினும் இது மிகவும் வழக்கத்திற்கு மாறாக அமைந்துள்ளதால், வேர்கள், இது என்ன? இதை எங்கிருந்து பெற்றுக் கொள்டோய்? இவன் சரி: இதெல்லாம் என்ன? என்று கூச்சலிடத் தொடங்குகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள், ''கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜாவுக்கு ஓசன்னா'' என்று கூச்சலிட்டிருக்க வேண்டும் (ஆனால் அவ்வாறு கூச்சலிட்ட ஒரு சிறு கூட்டம் அங்கிருந்தது; ஒரு சிறு கூட்டம் மாத்திரமே.) நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பு உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறி, தேசத்தில் இதுவரை நிகழாத மிகப் பெரிய சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏனெனில், மரித்தோரின் நம்பிக்கை. அதையே சார்ந்திருந்தது. எதிர்காலம் அனைத்தும் அதை சார்ந்திருந்தன. ஆனால் அதை விசுவாசிப்பதாக உரிமை கோரின மார்க சம்பந்தமான ஜனங்கள், ''அது யார்? அது என்ன கவர்ச்சி'' என்று கூச்சலிடத் தொடங்கினர். அது வழக்கத்திற்கு மாறான ஒன்று! இன்றும் அவ்வாறே வழக்கத்திற்கு மாரக உள்ளது. அது மாறுதேயில்லை. 27நான் இப்பொழுது கூறின வண்ணமாக, சில வழக்கத்திற்கு மாறான சம்பவங்களைப் பார்ப்போம். நியாயத் தீர்ப்பு உலகத்தை தாக்கி அதை தண்ணீரினால் அழிக்கும் மன்பு உண்டாயிருந்த கவர்ச்சி என்ன? ஏறக்குறைய நூற்றிருபது வயதுள்ள ஒரு வயோதிபன், மிதக்க விட தண்ணீர் இல்லாத போதே ஒரு பேழையை செய்து கொண்டிருந்ததே அது. அநேக ஆண்டுகளாக அவன் கதவண்டை நின்று கொண்டு, பேழையின் உட்புறத்தையுண்டாக்கி, உள்ளும் புறம்பும் அதற்கு கீல் பூசி, அந்த சிறப்பான விஞ்ஞான காலத்தில், ''உலகம் தண்ணீரினால் விழுங்கப்படும்'' என்று கூறினான். ''அந்த மலையின் மேல் பணியெடுக்கும் சப்தம் கேட்கிறதே, அது என்ன?'' ''அதுவா? நோவா என்னும் பெயருள்ள ஒரு கிழவன் மேலே இருக்கிறான். அவன் மூட வைராக்கியம் கொண்டவன். அந்த கிழவன் வெயிலில் அதிகம் நின்றுவிட்டான். அதனால் வெயில் அவனைப் பாதித்து, அவனுக்கு புத்தி மாறாட்டம் ஏற்பட்டுவிட்டது. 'பேழை' என்று அவன் அழைக்கும் ஒன்றை அவன் செய்து கொண்டிருக்கிறான். தண்ணீர் மேலேயிருந்து வரப் போகிறதென்றும், அது எல்லா ஜனங்களையும் அழித்து மிதக்க வைத்துவிடும் என்று அவன் கூறுகிறான்; அங்கு தண்ணீர் இல்லவே இல்லை. அவனுடைய செய்திக்கு செவி கொடாதவர் அனைவரும், அந்த பேழைக்குள் பிரவேசிக்காத அனைவரும், தண்ணீரில் மூழ்கி விடுவார்களாம். அப்படிப்பட்ட ஒன்றை நீங்கள் எப்பொழுதாவது கேட்டதுண்டா?'' இது அசாதாரணமான ஒரு கவர்ச்சி. 28ஜனங்களுக்கு வயிறு வலிக்க சிரிக்க வேண்டுமென்று தோன்றும் போது, அவர்கள் மேலே சென்று, பேழையின் வாசலின் முன்னால் நின்று, “நூறு ஆண்டுகளுக்கு முன்பே மழை பெய்யும் என்று சொன்னாயே! மழை பெய்யுமென்று நீ சொன்னதாக என் தாத்தா என்னிடம் சொன்னார். நீ இந்த பழைய மரத்துண்டை வைத்துக் கொண்டு, அதையே திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறாயே! இங்கிருந்து போய்விடு'' என்றனர். ஆனால் இது, தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்தி, அவருடைய தீர்க்கதரிசி உரைத்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற ஆயத்தப்பட்டுக் கொண்டிருத்தலாம். மிகவும் வழக்கத்திற்கு மாறான! தேவன் நோவாவுக்களித்த தமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது, மற்றவர்கள் சிரிக்கின்றனர். இது மாத்திரமல்ல, தேவன் தமது வார்த்தையைக் காப்பாற்றி அதை நிறைவேற்றுகிறார் என்பதை மற்றவர்களுக்கு இன்று வரையிலும் காண்பிப்பதற்காக ஒரு சரித்திரத்தை படைக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார். அது எவ்வளவாக உண்மையில்லாததைப் போன்றும், நியாய மற்றத்தைப் போன்றும் காணப்பட்டாலும், அவர் அப்பாழுதும் தமது வார்த்தையை காப்பாற்ற நிறைவேற்றுகிறார். அந்த கிழவன் பேழையை செய்தபோது உண்டாக்கின சப்தத்தை அவர் இன்றிரவு அமெரிக்காவிலுள்ள ஜனங்களுக்கும் உலகம் முழுவதிலுமுள்ள ஜனங்களுக்கும் உதாரணமாக வைத்துள்ளார். விஞ்ஞானம் என்ன கூறின போதிலும், அவர்கள் இது, அது, மற்றதை கூறின போதிலும், அவர் அப்பொழுதும் தமது வார்த்தையைக் காப்பாற்றி நிறைவேற்றுகிறார். அவர் சரித்திரம் படைத்துக் கொண்டிருந்தார். 29ஒரு நாள் நிகழ்ந்த கவர்ச்சி என்னவெனில்.... வனாந்தரத்தில் ஒரு அசாதாரணமான சம்பவம் நிகழ்ந்தது, அதாவது ஒரு முட்செடி அங்கு எரிந்து கொண்டிருந்தது. பயந்தோடிப்போன ஒரு தீர்க்கதரிசி வனாந்தரத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் ஒரு சப்தத்தையும் கேட்கவில்லை, எந்த ஒலியையும் கேட்கவில்லை. ஆனால் அவன் பார்த்த போது, மலையின் மேல் ஒரு அசாதாரணமான சம்பவத்தைக் கண்டான். தேவன் அவனுடைய கவனத்தைக் கவர முயன்று கொண்டிருந்தார். இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது! ''உன் சந்ததியார், அந்நிய தேசத்திலே நானூறு வருஷம் பரதேசிகளாயிருப்பார்கள். அதன் பிறகு அவர்களை பலத்த கரத்தினால் வெளியே அழைத்து வருவேன்'' (ஆதி.15:13-16) என்று தேவன் தமது தீர்க்கதரிசியாகிய ஆபிரகாமுக்கு அளிந்திருந்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்ற ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அந்த பணிக்கென்று அவர் ஒரு மனிதனை ஆயத்தப்படுத்தி வந்தார் - விசுவாசிக்கிற அனைவருக்கும் பாதுகாப்பான இடமாயிருக்க ஒரு பேழையை அவர் ஆயத்தம் பண்ணினது போல. தேவன் இந்த முட்செடி எரியும்படி செய்தார். அப்பொழுது ஆடு மேய்க்கும் மோசே, “இந்த வினோதமான காட்சி என்னவென்று கண்டு வருகிறேன்'' என்று கூறிச் சென்றான் தேவன் மோசேயை முட்செடியினருகில் கவர்ந்த பின்பு, அவனுடன் பேசினார். 30அதன் பின்பு பிலாத்துவின் மண்டபத்தில் காணப்பட்ட கவர்ச்சி என்ன? (பார்வோன் என்பதற்கு பதிலாக தீர்க்கதரிசி பிலாத்துஎன்று கூறிவிடுகிறார் - தமிழாக்கியோன்.) இந்த ஆடு மேய்ப்பவன் ஒரு கோலை தரையில் போட்டபோது, அது சர்ப்பமாக மாறினது. அது தேவன் மோசேக்கு அளித்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதாகும். சிவந்த சமுத்திரத்தில் உண்டான கவர்ச்சி என்ன? வானத்திலிருந்து வந்த காற்று அடித்து சிவந்த சமுத்திரத்தை வலப்பக்கத்திலிருந்துலிருந்து இடது பக்கம் இரண்டாகப் பிளந்து, அந்த ஏழை அடிமைகள் தேவனுடைய பணியில் ஈடுபட்டு அதன் வழியாக நடந்து சென்றது பார்வோனின் குதிரை வீரர்களை வியப்பில் ஆழ்த்தியது. அது என்ன? தேவன் தமது வார்த்தையை காப்பாற்றி நிறைவேற்றுவதாகும். மரித்தது அகன்று சென்று, உயிருள்ள ஜனங்கள் கடந்து சென்றனர். ஆவிக்குரிய பிரகாரம் மரித்த ஜனங்கள் அதை பாவனை செய்ய முயன்று மூழ்கிப் போயினர். தேவன் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றி சரித்திரத்தை படைத்தார். அதுதான் சிவந்த சமுத்திரத்தில் உண்டாயிருத்த கவர்ச்சி [(Red sea) என்பதற்கு பதிலாக (Dead sea) என்று தீர்க்கதரிசி கூறுகிறார் - தமிழாக்கியோன]. 31அதன் பிறகு இரண்டாம் நாள் சீனாய் மலையின் மேல் உண்டான கவர்ச்சி என்ன? ஜனங்கள் அனைவரும் தங்கள் மனைவிகளுடன் சேராமல், தங்கள் துணிகளைத் துவைத்து, தங்களை பரிசுத்தம் பண்ணி, அந்த மலையைச் சுற்றி கூடும் படி கட்டளையிடப்பட்டனர். மோசே என்னப்பட்ட மனிதன் அக்கினி ஸ்தம்பத்தில் தேவனை அந்த மலையின் மேல் சந்தித்ததாக அவர்களிடம் கூறியிருந்தான். தேவன் மோசேயிடம், ''நான் ஜனங்களின் மத்தியில் இறங்கி வந்து, உன்னிடம் கூறினதையும் நான் யாரென்பதையும் அவர்களுக்கு உறுதிப்படுத்தித் தரப் போகின்றேன். நானே அந்த தேவன் என்பதை அவர்களுக்குக் காண்பிக்கப் போகின்றேன்'' என்றார். அதுதான் அந்த கவாச்சி, தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுதல். 32சரித்திரத்தில் காணப்படும் ஒரு நாளில் உண்டான கவர்ச்சி என்ன? அப்பொழுது அந்த தேசம் தேவனை மறந்து, ஜனங்கள் சம்பிரதாயமுள்ளவர்களாகவும், சிரத்தையற்றவர்களாகவும் இருந்தனர். ஆசாரியர்கள் அனைவரும் நவீனப் போக்கில் சென்று, தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களின் சித்ததிதிற்கேற்ப தீர்க்கதரிசனம் உரைத்து வந்தனர். அந்த நாளில், வழக்கம் போல அவர்கள் மூடபக்தி வைராக்கியம் கொண்டவன் என்று கருதின ஒரு மனிதன் இருந்தான். அவன் ஸ்திரீகள் முகத்தில் வர்ணம் தீட்டிக்கொள்ளுதல் போன்ற செயல்களைக் கடிந்து கொண்டான். அவன் ஒருவகையான வினோதமான மனிதன். இந்த கிழவன் ராஜாவினிடத்தில் சென்று, ''நான் கட்டளையிட்டாலொழிய, வானத்திலிருந்து ஒரு துளி பனியும் கூட விழாது'' என்றான். 33அவன் பயந்து ஓடிப்போய் வனாந்தரத்தில் எங்கோ ஒளிந்து கொண்டான் என்று நாம் காண்கிறோம். அவன் பசியினால் வாடிமரித்துப் போயிருப்பான் என்று அந்த கூட்டம் ஜனங்கள் எண்ணினர். ஆனால், அவனுக்கோ நன்றாக உணவும், தண்ணீரும் அளிக்கப்பட்டது. அவன் வந்து, ''என்னிடம் கர்த்தர் உரைக்கிறதாவது என்பது உள்ளது என்று நீங்கள் காண்கின்றீர்களா? உங்களுக்கு இன்னமும் நம்பிக்கையில்லை என்றால், வாருங்கள், நாம் மலையின் மேல் சென்று யார் தேவன் என்பதை நிரூபிப்போம்'' என்றான். அவன், ''நீங்கள் ஒரு பலிபீடத்தைத் தெரிந்து கொண்டு ஒரு காளையை வெட்டி அதன் மேல் கிடத்துங்கள். நானும் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, என்னுடைய பலிபீடத்தின் மேல் ஒரு காளையை கிடத்துகிறேன். நாமிருவருமே பலி செலுத்துவோம். யார் தேவனோ, அவர் உத்தரவு அருளட்டும்'' என்றான். தேவன் அவனிடம் கூறியிராவிட்டால், அவன் அப்படி ஒருக்காலும் செய்திருக்க மாட்டான். அவனே பின்னர், ''கர்த்தாவே, நான் இந்தக் காரியங்களை யெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன்'' என்றான் (1 இரா.18:36). 34அங்கிருந்த கவர்ச்சி என்ன? அங்கு நானூறு தீர்க்கதரிசிகள் மலையின் மேல் நின்று கொண்டிருந்தனர். ராஜா தன் இரதத்தில் அவனுடைய ஆயுதங்களுடன் அமர்ந்திருந்தான், காவலர்கள் அவனைச் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர். அடர்த்தியான மயிர் முகத்தில் வளர்ந்து, சுருங்கிய முகமும், வழுக்கை தலையும் கொண்ட இந்த வயோதிப மனிதன். ஆட்டுத் தோலை சுற்றிக் கொண்டு, தேகம் முழுவதும் மயிர் வளர்ந்து, ஒரு கையில் தடியும், மறு கையில் எண்ணெயுள்ள பாத்திரமும் பிடித்துக் கொண்டு அங்கு நின்று கொண்டிருந்தான். இவன் தான் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ''நான் கட்டளையிடும் வரைக்கும் ஒரு துளி பனியும் கூட பெய்யாது'' என்றான். (தேவனுடைய இடத்தை அவன் எடுத்துக் கொண்டு, அவர்கள் கூறி வந்த வட்டவடிவமான ஒளியையும், நிழல்களையும் கொண்டவனாயிருந்தான்). மூடபக்தி வைராக்கியம் கொண்ட இந்த வயோதி பன் மலையின் மேல் நின்று கொண்டு, மற்றவர்களையும் அங்கு வர வழைத்தான். அந்த கவர்ச்சி என்ன? அது தமது தீர்க்கதரிசி சரியென்பதை உறுதிப்படுத்த தேவன் காத்துக் கொண்டிருத்தலாம். அது தேவன் தீர்க்கதரிசனத்தை நிறை வேற்றுதலாம். தேவன் வார்த்தையை நிரூபித்து சரித்திரம் படைத்துக் கொண்டிருந்தார். 35அதன் பின்பு சில நூற்றாண்டுகள் கழித்து, அதே ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மனிதன் இருந்தான். அவன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு வருகிறவனாயிருந்தான். அவனுடைய தகப்பனார் ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு ஆசாரியனாக இருந்த போதிலும், அவன் எந்த ஸ்தாபனத்தையும் சேரவில்லை, அவன் ஆட்டுத்தோலை உடுத்தினவனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவனுடைய முகம் முழுவதும் மயிர் வளர்ந்திருந்தது. அது நரைக்காமல் கறுப்பாயிருந்தது. இந்த மனிதனில், எருசலேமையும், யூதாவையும் கவர்ந்த அப்படிப்பட்ட கவர்ச்சி என்ன இருந்தது? சிஜர், ''காட்டு மனிதன் ஒருவன் இருக்கிறான். அவன் ஜனங்களைத் தண்ணீரில் முழுக்கிக் கொல்லப் பார்க்கிறான். அப்படிப்பட்ட ஒன்றை இதற்கு முன்பு யார் கேள்விப்பட்டது'' என்றனர். 36மற்றவர்கள் என்ன நடக்கிறதென்று அறிய ஆவல் கொண்டனர். ''இவர் மேசியாவாக இருக்க வேண்டும்“ என்றனர் அவர்கள். வேறொருவர், ”அவர் தீர்க்கதரிசிகளில் ஒருவராயிருக்கலாம்“ என்றார். அவர்கள் எந்த ஒரு தீர்மானத்துக்கும் வர முடியவில்லை. ஆனால் அது என்ன? அது தேவன் ஏசாயா 40ஐ நிறைவேற்றுவதாகும். ”இதோ...'' அவர் கடைசி நாட்களில் என்ன செய்வாரென்றும், அவருடைய ஊழியக்காரனை எவ்வாறு அனுப்புவார் என்பது போன்றவை. அதன் பின்பு சில வாரங்கள் கழித்து, அந்த மனிதன் தனது செய்தியைக் குறித்து மிகுந்த நிச்சயம் கொண்டவனாயிருந்து, ''உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். அவருடைய பாத ரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரனல்ல. நான் உங்களுக்கு ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன். அவரோ பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்'' என்றான். (மத்.3:11) 37ஒரு நாள் ஏறக்குறைய முப்பது வயதுள்ள ஒரு சாதாரண வாலிபன் நடந்து சென்று ஞானஸ்நானம் பெற்றுர் கொண்டார். இந்த மனிதன் வந்தபோது, அது தீர்க்கதரிசியை மிகவும் கவர்ந்தது. தீர்க்கதரிசி அன்று விசித்திரமாக நடந்து கொண்டான் தீர்க்கதரிசி நதிக்கரையில் ஆசாரியர்களுடன் வாக்குவாதம். செய்து கொண்டிருந்த போது. அவனுடைய நடத்தையை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. ஆசாரியர்கள், தேவன் இந்த பலிபீடத்தைக் கட்டினார், தேவன் எங்களிடம் இதைச் செய்யக் கூறினார். மோசே தீர்க்கதரிசி. நாங்கள் மோசேயை விசுவாசிக்கிறோம். பலி ஒருக்காலும் நீக்கப்படாது'' என்றனர். யோவான் இவ்வாறு பதிலளிப்பதை என்னால் கேட்க முடிகின்றது. அன்றாட பலி நீக்கப்படும் என்று தானியேத் தீக்கதரிசி உரைத்துள்ளதை நீங்கள் வேதத்தில் படித்ததில்லையா? (தானி.12:11). அந்த நேரம் இப்பொழுது வந்துவிட்டது. ஏசாயா 40ம் அதிகாரத்தில், ''கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று'' (ஏசா.40:3,5) என்று கூறியுள்ளதை நீங்கள் வாசிக்கவில்லையா? என்னைக் குறித்து இரண்டு தீர்க்கதரிசனங்கள் உரைக்கப்பட்டுள்ளன. வேறொன்று, நானூறு ஆண்டுகளுக்கு முன்பே நமது தீர்க்கதரிசியாகிய மல்கியா தன்னுடைய புத்தகத்தில் 3ம் அதிகாரத்தில், ''இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை, ஆயத்தம் பண்ணுவான்'' என்று தீர்க்கதரிசனம் உரைத்துள்ளதை நீங்கள் அறியவில்லையா? இது அந்த தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாயுள்ளது என்று உங்களுக்குத் தெரியாதா என்று கூறியிருப்பான். தீர்க்கதரிசனம் நிறைவேறிக் கொண்டிருந்தது. 38அந்த நேரத்தில் அவன் திரும்பிப் பார்த்து, ''இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி'' என்றான். (யோவான்.1:29). அந்த கவர்ச்சி என்ன? அது தீர்க்கதரிசியிலிருந்து அவனுடைய தீர்க்கதரிசனத்துக்கு மாறினது. என்ன நடந்ததென்று பாருங்கள், இங்கு ஒரு சாதாரண மனிதன் வருகிறார். அவரை யாரும் அறியவில்லை. அவர் தச்சனின் குமரரன். அவர் நடந்து தண்ணீருக்குள் வருகிறார். அந்த மகத்தான தீர்க்கதரிசி அவரைக் கண்டபோது, “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க நீர் என்னிடத்தில் வரலாமா?'' என்றான். (மத்.3:14). அவர், ''இப்பொழுது இடங்கொடு. தீர்க்கதரிசியும், வார்த்தையும் என்னும் முறையில் எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்திறது'' என்றார். பலி செலுத்தப்படுவதற்கு முன்பு அது கழுவப்பட வேண்டுமென்பதை அவன் புரிந்து கொண்டு, அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். 39அவர் தண்ணீரிலிருந்து கரையேறின போது, வேறொரு கவர்ச்சி அங்கு நிகழ்ந்தது. அவனுடைய காலத்தையும், நேரத்தையும் விகவாசத்துடன் பிரகடனம் செய்த இந்த தீர்க்கதரிசி அண்ணாந்து பார்த்தபோது, வானம் திறக்கப்பட்டதையும் தேவ ஆவி புறாவைப் போல் அவர் மேல் இறங்கி வருகிறதையும் கண்டான். அப்பொழுது ஒரு சத்தம், ''இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்'' என்று உரைத்தது. தேவன் தீர்க்கதரிசியின் செய்தியை உறுதிப்படுத்தினார். இதுவே, யோர்தானில் ஜனங்களின் கவனத்தைக் கவர்ந்தது. 40சற்று முன்பு அந்த சகோதரன் பாடினார், இல்லை, ''தூரமான மலையின் மேல் ஒரு பழைய கரடுமுரடான சிலுவை நின்ற கொண்டிருந்தது'' என்னும் பாடலை அவர் பாட வேண்டுமென்று குறிக்கப்பட்டிருந்தது. கல்வாரி மலையின் மேல் இருந்த கவர்ச்சி என்ன? மத சம்பந்தமான உலகம் அவரை ஆக்கினைக்குள்ளாக்கி, ரோம அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதித்ததென்று நாம் காண்கிறோம். அவர் இரண்டு கள்ளர்களின் மத்தியில், பயங்கர தாகம் கொண்டவராய் தொங்கினார்: அவருடைய சரீரத்திலிருந்து இரத்தம் பீறிட்டு வெளியே வந்தது. அவர், ''என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்'' என்று சத்தமிட்டு, அங்கு தொங்கிக் கொண்டிருந்தார். அங்கு நின்று அதை பார்த்துக் கொண்டிருந்த மத சம்பந்தமான ஜனங்களுக்கு பழைய ஏற்பாட்டின் நீரிக்கதரிசனம் அந்த நேரத்தில் கல்வாரியில் நிறைவேறிக் கொண்டிருந்தது என்பது தெரியவில்லை. தாவீதே எழுதி, நடித்து.... மற்ற தீர்க்கதரிசிகனைப் போல் அவனும் ஆவிக்குள்ளாகி, அது அவரே என்பது போல் நடந்து கொண்டான், அவன் 22ம் சங்கீதத்தில், ''என் தேவனே என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என் எலும்புகளை யெல்லாம் நான் எண்ணலாம். அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் கைகளையும், கால்களையும் உருவக்குத்தினார்கள்'' என்றான். தாவீது, தான் அவரே என்பது போல் பேசுகின்றான். அது தாவீதல்ல, அது தாவீதுக்குள் இருந்த கிறிஸ்து. வெவ்வேறு தீர்க்கதரிசிகளின் மூலம் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் கல்வாரி மலையில் நிறைவேறிக் கொண்டிருந்தது. கல்வாரி மலையின் மேலிருந்த கவர்ச்சி என்ன? தேவன் நமத வார்த்தையை நிறைவேற்றுதல். 41மற்றுமொரு கவர்ச்சி மலையின் மேல் பெந்தெகொஸ்தே நாளன்று தோன்றியது. அவர்கள் பண்டிகையின் போது ஒன்று கூடியிருந்தனர். ஜனங்கள் எல்லோரும் இந்த மூட பக்தி, வைராக்கியம் கொண்டவர்கள் ஒழிந்து விட்டதாக எண்ணினர். ஏனெனில், பத்து நாட்களாக அவர்களைக் குறித்து அவர்கள் ஒன்றுமே கேள்விப்படவில்லை. ஆனால், திடீரென்று தேன் கூட்டிலிருந்து தேனீக்கள் வெளிவருவது போல், இவர்கள் கட்டிடத்தின் மேலறையிலிருந்து புறப்பட்டு கூச்சலிட்டுக் கொண்டு தெருக்களில் வந்தனர். ''இது என்ன? இதன் அர்த்தம் என்ன? இவர்களெல்லோரும் மதுபானத்தினால் வெறி கொண்டிருக்கின்றனரா?'' கவனியுங்கள்! ஒரு தீர்க்கதரிசி அவர்கள் மத்தியில் எழுந்து நின்று - அதுதான் ஒரு தீர்க்கதரிசி கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு - ''யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவி கொடுங்கள். நீங்கள் நினைக்கிற படி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே, கடைகி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் - என்பது நடந்தேறுகிறது'' என்றான். (அப்.2:14-17). அதுதான் அந்த கவர்ச்சி. 42மத சம்பந்தமான ஜனங்கள், ஜீவாதிபதியை சிலுவையில் அறைந்த பின்பு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவி வர வேண்டுமென்பதை அறியாமலிருந்தனர். ''இவர்கள் யார்? இதன் அர்த்தம் என்ன? இவர்களுக்கு என்ன நேர்ந்தது?'' என்பதே கவர்ச்சியாக அமைந்திருந்தது. ஓ, என்னே! இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. நாம் அநேக காரியங்களை கூறாமல் விட்டுவிட்டு, இக்காலத்துக்கு வருவோம். இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது. அதே காரியம் இன்றும் சம்பவிக்கிறது; “இந்த பேரிரைச்சல் எல்லாம் என்ன?'' என்பது போன்ற அதே கேள்கள் கேட்கப்படுகின்றன. நீங்கள் தெருக்களில் பார்த்தால், கார்கள் மிஷிகனிலிருந்து பிளாரிடாவுக்கும், மேய்னிலிருந்து கலிபோர்னியாவுக்கும் சென்று கொண்டிருக்கின்றன, இன்று காலை, இல்லை, இன்று பகல் நானும் மனைவியும் போய்க் கொண்டிருந்த போது, கார்களிலுள்ள லைசென்ஸுகளை நோக்கிக் கொண்டே சென்றோம். அதிலிருந்து தான் நான், ''இதன் அர்த்தம் என்ன?'' என்னும் பொருளைத் தெரிந்து கொண்டேன். ''பிணம் எங்கேயோ, அங்கு கழுகுகள் கூடும்'' என்று கூறப்பட்டுள்ளது போல. 43நான் என் மனைவியிடம், “தேனே, இவ்வுலகில் எனக்கு அருமையாயுள்ள எல்லோரிடமிருந்தும் விடைபெற்று, தேவன் எனக்குள் கட்டளையிட்டதைத் தொடங்க நான் ஊழியத்திற்கு சென்ற இரவு ஞாபகமுள்ளதா? அப்பொழுது நீ இந்த பாடலைப் பாடினாயே'' என்றேன். ஓ, அவர்கள் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், தூர தேசத்திலிருந்தும் வந்து, நமது ராஜாவுடன், அவருடைய விருந்தாளிகளாக பந்தியிருப்பார்கள். திவ்விய அன்பினால் ஜொலிக்கும், அவருடைய பரிசுத்தமான முகத்தைக் காண, இந்த யாத்திரீகர்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! அவருடைய கிருபையில், அவர்கள் பங்கு கொண்டு, அவருடைய கிரீடத்தில், இரத்தினங்களாக பிரகாசிப்பார்கள். 44அதுதான் அந்த கவர்ச்சி. அதைப் பின்பற்றுவதைத் தவிர வேறொன்றையும் செய்ய முடியாத தேவனுடைய முன் குறிக்கப்பட்ட வித்துக்கள் எங்களுக்கு எங்கள் உயிரினும் மேலானவர்கள். எங்கள் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், இதை மாத்திரம் எடுத்துக் கொள்ளாதீர்கள். கவர்ச்சி என்ன? தேவன் வழக்கம் போல் தமது வார்த்தையை நிறைவேற்றுதலே, அவர் தீர்க்கதரிசியாகிய சகரியாவின் வார்த்தையை மறுபடியும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். நான் சற்றுமுன்பு சகரியாவின் புத்தகத்தில் 9ம் வசனத்தைப் படித்தேன். இயேசு தேவாலயத்துக்குள் பிரவேசித்த போது, இல்லை, ஒரு சிறு வெள்ளை கழுதையின் மேலேறி எருசலேமுக்குள் பிரவேசித்த போது, ''சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசேலம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வகுகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும், தாழ்மையுள்ளவரும், கழுதையின் மேலும் கழுதைக் குட்டியாகிய மறியின் மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்'' (சக.9:9) என்று சகரியா உரைத்த தீர்க்கதரிசனம் நிறைவேறியது. அதுதான் மதத்திற்கு தலைமை அலுவலகமாக விளங்கிய எருசலேமில் உண்டான கவர்ச்சியாகும். 45இப்பொழுது கடைசி நாளின் சம்பவம் ஒன்றைக்காண் கின்றோம். சகரியாவின் புத்தகத்தில் இன்னும் சில பக்கங்களைத் திருப்பி, அதைக்குறித்து அவன் என்ன கூறியுள்ளான் என்று பார்ப்போம். கடைசி நாட்களுக்கென அவன்கூறியுள்ளதற்கு நாம் வேதத்தை திருப்புவோம். சகரியா 14ம் அதிகாரம், 4ம் வச னம்தொடங்கி, கவனியுங்கள்! நாம் சுமார் ஒன்பது வசனங்களைப் படிக்கப் போகின்றோம் - 4முதல் 9 வசனங்கள். கூர்ந்து கவனியுங் கள், அவர் கடைசி நாட்களில் வருவதைக் குறித்துதீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. எனவே இப்பொழுது கூர்ந்து கவனி யுங்கள். இதுகர்த்தர் உறைக்கிறதாவது. இது வேதவசனங்கள். சகரியா;14, சகரியா;9 என்ன கூறினது என்று ஞாபகமுள்ளதா? அவர்கள் அதன் நிறைவேறுதலை அடையாளங் கண்டு கொள்ளவில்லை. இன்று எவ்வாறுள்ளது? சகரியா;14, அவருடைய வருகையைக் குறித்து உரைக்கின்றது. அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவ மலையின் மேல் நிற்கும். அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவ மலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே ஒரு பாதி வட பாகத்திலும், ஒரு பாதி தென் பாகத்திலும் சாயும். அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஒடிப் போவீர்கள், மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால் மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனது போல் ஓடிப்போவீர்கள்.... 46வேறொரு பூமியதிர்ச்சி பூமியைப் பிளக்கின்றது! நீங்கள் இங்கு ஒரு வேதவாக்கியத்தை கவனிக்க விரும்பினால், 3ம் வசனத்தைக் கவனியுங்கள். ஒலிவ மலை பிளத்தல் ஒரு பூமியதிர்ச்சி பின் காரணமாக என்று புலனாகின்றது. இது ஏசாயா 29:6, வெளிப்படுத்தல்;16:9 ஆகியவைகளின் மூலம் உறுதிப்படுகின்றது. நிச்சயமாக. அது என்ன? அவருடைய முதலாம் வருகையைக் குறித்து அறிவித்த அதே தீர்க்கதரிசி, அவருடைய இரண்டாம் வருகையையும் காண்கின்றான்! கவனியுங்கள். “பூமியதிர்ச்சியின் நாட்களில்'' பூமியதிர்ச்சிகள் என்ன செய்கிறதென்று பாருங்கள், அவைகளைக் குறித்து முன்னுரைக்கப்பட்டுள்ளதைப் பார்த்தீர்களா? ...என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள். அந்நாளில் (அல்லேலூயா!) வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும், ஒருவேளை மப்புமாயிருக்கும். ஒரு நாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல, இரவுமல்ல; ஆனால் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். (ஓ, தேவனே!) 47''சாயங்காலத்திலே வெளிச்சமூண்டாகும்.'' அதே தீர்க்கதரிசி, ஜனங்களோ குருடாயிருக்கின்றனர்! கவர்ச்சி என்ன? தொடர்ந்து இன்னும் இரண்டு வசனங்களை வாசிப்போம்: அந்நாளிலே ஜீவ தண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்கு சமுத்திரத்துக்கும் போய், மாரி காலத்துக்கும் கோடை காலத்துக்கும் இருக்கும் (சுவிசேஷம் யூதர்களுக்கும், புறஜாதிகளுக்கும் செல்லுதல்.) அப்பொழுது கர்த்தர் பூமியின் மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும், (உண்மை!) மகிமையின் வழியை நிச்சயம் கண்டு கொள்வாய்; தண்ணீரின் வழியில் இன்றைய வெளிச்சம் உள்ளது, விலையுயர்ந்த இயேசுவின் நாமத்தில், அடக்கம் பண்ணப்படுதல். வாலிபரே, வயோதிபரே, உங்கள் பாவங்களுக்காக மனந்திரும்புங்கள், பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உள்ளே வருவார், சாயங்கால வெளிச்சம் வந்து விட்டது, தேவனும் கிறிஸ்துவும் ஒன்று என்பது உண்மை. நாம் எங்குள்ளோம் என்று பார்த்தீர்களா? நாடுகள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்தெழும்புகிறாள். நம் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்கள், (கடைசி நாளில் புறஜாதிகளுக்கு பூமியதிர்ச்சி உண்டாகும் என்பது) புறஜாதிகளின் நாட்கள் கணக்கிடப்பட்டுள்ளன, பயம் எங்கும் சூழ்ந்துள்ளது; ஓ, கிதறப்பட்டோரே, உங்கள் சொந்தத்திற்கு திரும்புங்கள், உதைத்து வெளியே தள்ளப்பட்டோரே, இந்த உடன்படிக்கை பெட்டிகள் புது வண்டிகளில் சுமந்து கொண்டு செல்லப்படுகின்றன. மாரணம் உங்களைத் தாக்குவதற்கு முன்பு அங்கிருந்து வெளியேறுங்கள். தேவன் அதை ஊர்ஜிதப்படுத்தி விட்டார். அது அப்படியே ஆகும். 48இப்பொழுது நாம் பழைய ஏற்பாட்டிலுள்ள மற்றொரு வேதபாகத்துக்கு வேதாகமத்தை திருப்புவோம். மல்கியா 4ம் அதிகாரம், அந்த சிறிய அதிகாரத்தை வாசிப்போம்: இதோ, சூளையைப் போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்.... இப்பொழுது இது... மல்கியா 3 முதலாம் வருகை அறிவிக்கிறது. இங்கு அவருடைய அடுத்த வருகை கூறப்பட்டுள்ளது. டாக்டர் ஸ்கோபீல்டு எழுதி வைத்துள்ள எல்லா குறிப்புகளையும் நான் ஆமோதிப்பதில்லை. ஆனால், இங்கு அவர் சரியாக எழுதியுள்ளார் - மல்கியா 3 யோவான் ஸ்நானனைக் குறித்து ஊழியமென்றும், இந்த அதிகாரம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும், அதற்கு முன்பு எலியா வருதலையும் குறித்து என்றும். ....அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும், கொப்பையும் வைக்காமற் போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (அப்படியானால், ''நித்திய'' நரகம் எங்கே?) ஆனாலும், என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப் போல வளருவீர்கள். துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும் நாளிலே, அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஒரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும், என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும், நியாயங்களையும் நினையுங்கள். 49எலியாவின் வருகையைக் குறித்து இதோ. இதோ, நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். பழைய ஏற்பாட்டை முடிக்கும் கடைசி வேதவாக்கியம். இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். அது யோவானாக இருக்க முடியாது. முடியாது. பாருங்கள், அப்பொழுது உலகம் எரிந்து, நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலைமிதிக்கவில்லை. பாருங்கள்? இல்லை, இல்லை, இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே: நான் வந்து பூமியைச் சங்காரத்தால் வடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். எலியாவின் இரண்டு வருகைகளைக் குறித்து குழப்பம் ஏற்படாதபடிக்கு பரிசுத்த ஆவியானவர் பிழையற்ற விதத்தில் உரைந்துள்ளதை கவனியுங்கள். மல்கியா 3ம் அதிகாரம், ''இதோ நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்“ என்றுரைக்கிறது. யோவானைக் குறித்து இயேசுவிடம் கேட்கப்பட்ட போது அவர், ''நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன் தான். அதெப்படியெனில், இதோ நான் என தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன், என்று நீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டவன் இவன் தான்'' என்றார் (மதி;11:14,10). அது மல்கியா 3. 50வேதவாக்கியம் இழையின்றி தருவதைக் கவனியுங்கள். இது என்ன கூறுகிறதென்று கவனியுங்கள்... இதை விசுவாசிக்க விரும்புகிறவர்களுக்கு, இதை புரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு. வேத வாக்கித்தைப் படித்துக் கொண்டிருந்த போது, இயேசு நடுவில் நிறுத்தினது ஞாபகமிருக்கிறதா? (லுக்கா;4:17-20). ஏனெனில், அதன் ஒரு பாகம் தான் அப்பொழுது நிறைவேறினது. இதன் மற்றபாகம் அவருடைய இரண்டாம் வருகையைக் குறித்தாகும். “கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும்'' இதை படித்து நிறுத்தி விட்டார். ''தேவன் நீதியை புறஜாதிகளுக்கு சரிகட்டுவார்'' (ஏசா.61.2) என்னும் பாகத்தை அவர் படிக்கவில்லை. அது, அவருடைய இரண்டாம் வருகையின் போது. 51இந்த வேதவாக்கியம் அதற்கு இணையாயுள்ளது. ''எலியா பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்தில் திருப்புவாள்.'' (அது மல்கியா 4, இல்லை மல்கியா 3. அதை குழப்பிக் கொள்ளாதீர்கள்). இயேசு கிறிஸ்துவின் முதலாம், வருகையின் நாட்களுக்கு முன்பு வந்த யோவானாகிய எலியா பழைய கோத்திரப் பிதாக்களாகிய, பிதாக்களின் இருதயத்தை பிள்ளைகளின் செய்திக்கு, புது செய்திக்கு - திருப்பினான். (லூக்.1:17). இப்பொழுது கவனியுங்கள்! - ''பிள்ளைகளின் இருதகத்தைப் பிதாக்களிடத்திற்கு திருப்புவான்.'' அவருடைய இரண்டாம் வருகையின் நேரத்தில் கடைசி நாட்களில், இவன் மறுபடியும் அப்போஸ்தலரின் விசுவாசத்துக்குத் திருப்புகிறான். வேதவாக்கியங்கள் எவ்வளவாக பிழையின்றி அமைந்துள்ளன என்பதைப் பாருங்கள். அது பழைய ஏற்பாட்டின் முடிவு. இப்பொழுது சாயங்காலத்தில் வெளிச்சம் உள்ளது. அது என்ன! அது மேல் பாகம், மரத்தின் மேல் பாகம். 52இன்று காலை நான் கூறினது போன்று, நாம் ஸ்தாபனங்களின் வழியாக வந்தோம், அது வெறும் ஆரஞ்சு மரம் மாத்திரமல்ல, மற்ற எலுமிச்சை வகை பழங்களையும் அதிலிருந்து நாம் பெற்று வந்தோம். அது தொடக்கத்திலிருந்தது போலவே இல்லை. அதன் பிறகு.... இதை கவனிக்கத் தவறாதீர்கள் !இதோ! அது வருகின்றது! ஸ்தாபனங்கள் அனைத்தும் தங்கள் பாகத்தை ஏற்று முடித்த பின்பு - அவர்களுக்கு எந்த வெளிச்ச மும் தொடக்கத்திலேயே இல்லை - பகல் அல்லது இரவு என்று அழைக்க முடியாத ஒரு நாள் வரும். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? ஆரஞ்சு மரத்திலுள்ள எலுமிச்சம் பழம் என்ன செய்கிறது? அது மேலே வரும் ஆரஞ்சிலுள்ள மூலசத்தை உறிஞ்சி, எலுமிச்சம் பழத்தை பாவனையாகத் தருகின்றது, அதைதான் ஸ்தாபனங்கள் தேவனுடைய வார்த்தைக்கு செய்துள்ளன. அவர்கள் தங்கள் பாரம் பரியங்களினால் தேவனுடைய வார்த்தையை அவமாக்கி விட்டார்கள். அது கர்த்தருடைய ஆவியானவர் உரைக்கிறதாவது! அவர்கள் எலுமிச்சை வகை பழங்களைத் தந்தனரேயன்றி, ஆரஞ்சு பழங்கனை அல்ல. 53ஆனால் தீர்க்கதரிசி என்ன கூறினான்? இன்றிரவு நமது பொருளுக்காக தெரிந்து கொண்ட, ''எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; சீயோன் குமாரத்தியே, களிகூரு; இதோ உன் ராஜா தாழ்மையுள்ளவராய் கழுதைக் குட்டியாகிய மறியின் மேல் ஏறி உன்னிடத்தில் வருகிறார்'' என்னும் வசனத்தைக் கூறின அதே தீர்க்கதரிசி, ''பழுக்கும் காலம் ஒன்று வரும்'' என்று கூறுகிறான். பழங்களை பழுக்க வைக்க சூரிய வெளிச்சம் பூமிக்கு அனுப்பப்பட்டது. பின்னை ஏன் அது பழுக்கச் செய்யவில்லை? பழுக்கச் செய்ய பழம் அங்கில்லை. ஆனால், ஜீவனோ பிரயாணம் செய்து வருகிறது. 54அது ஆரஞ்சு பழமாக ஆவதற்கு நார்த்தங்காயிடம் வந்தது. அது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டது. என்பதைக் கண்டது. அது நார்த்தங்காயானது. அது மறுபடியும் மேலே செல்லத் தொடங்கினது, இந்த முறை அது எலுமிச்சப் பழமாக ஆனது. அது மறுபடியும் மேலே சென்றது. இம்முறை அது வேறொரு எலுமிச்சை வகை பழமாக மாறினது. கடைசியில் அது மரத்தின் உச்சிக்கு வந்த போது, அது 'டாங்கலோ' (tangelo) என்னும் பழமாக மாறினது. அது பாதி ஆரஞ்சு பாதி எலுமிச்சம்பழம்; கலப்பு இனம், மாற்றப்பட்ட ஒன்று, அதே மரத்தில் வளரும் கலப்பு பழம்; பதர், “தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஏறக்குறைய வஞ்சித்தல்.” காண்பதற்கு அது ஆரஞ்சு பழத்தைப் போல் உள்ளது, ஆனால் அது ஆரஞ்சு பழம் அல்ல. ''ஆனால் வெளிச்சம் உண்டாகும்.'' அவள் ஸ்தாபனங்களையெல்லாம் கடந்து வளரும் போது. அவள் ஸ்தாபனங்களைக் கடந்து மறுபடியும் மலரும் போது, அவள் பூமிக்கடியில் சென்ற போது இருந்த விதமாகவே ஆரஞ்சு பழங்களைத் தருவாள். இந்த கவர்ச்சி என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன? தேவனுடைய வார்த்தை நிறைவேறுதல்! இப்படி நடக்குமென்று பழைய ஏற்பாட்டில் இரண்டு சாட்சிகள் உள்ளன. 55இப்பொழுது புதிய ஏற்பாட்டில் யோவான்;14:12ஐப் பார்ப்போம். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும், செய்வான் என்று இயேசு கூறினார். மேலும், லூக்கா;17:22 முதல் 30 வசனங்களில், அவர், லோத்தினுடைய நாட்களில் நடந்தது போல, சோதோம் எரிவதற்கு முன்பு. மனுஷ குமாரன் திரும்பி வரும் போது, மனுஷ குமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும் என்று கூறியுள்ளார். ஓ, வேத வசனங்களைப் பாருங்கள்! ''மனுஷகுமாரன்,'' நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்து, ஸ்தாபனங்களைக் கடந்து வளர்ந்து, மரத்தின் உச்சியை அடைந்து விட்டார். அவர் யோவான் 14ல், இல்லை 15ல், என்ன கூறினார்? ''என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அது அறுத்துப் போடப்பட்டு, நெருப்பில் சுட்டெரிக்கப்படும். கனி கொடுக்கிற கொடி எதுவோ அது சுத்தம் பண்ணப்படும்.'' 56ஓ, இந்த சிறு கழுதையின் மேல் தாழ்மையுள்ளவராய் ஏறி வரும் அவருடன் கூட, எவ்வித சந்தேகமும் ஸ்தாபனமுமின்றி, கர்த்தரின் நாமத்தினாலே வருகிற ராஜாவுக்கு ஓசன்னா என்று ஆர்ப்பரித்து வரும் அந்த சிறு கூட்டத்தாரின் மேல், இந்த கடைசி நாட்களில் உண்மையான முன் மாரியும், பின் மாரியும் பொழியும். இங்றைய காரியம் என்ன? மலையின் மேலுள்ள கவர்ச்சி என்ன? 57சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரசங்கபீடத்தில் நின்று கொண்டு, '' இவர்கள் ஒரு முளையை (stake) உன் வீட்டின் முன்னால் அடித்து, உன் வாசல் கதவை நகர்த்தி வைக்கப் போகும் ஒரு நாள் வரும். நீயோ கோபங்கொள்ளாமல், வேறு வழியாகச் செல்வாய்'' என்று பரிசுத்த ஆவியானவரால் உரைக்கப்பட்டது என்று கூறினேன். தரிசனத்தில், என் வாசல் கதவு பிடுங்கப்பட்டு மலைபாகத்தில் கிடத்தியிருப்பதைக் கண்டேன், என் வீட்டின் முன்னால் உள்ள மலைதோண்டப்பட்டு, அங்கிருந்த பலகைகளும் மற்றவைகளும் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்... நான் பார்த்த போது. ''ரிக்கி'' ஒருவன் என் வாசல் கதவைப் பிடுங்கிக் கொண்டிருந்தான். நான் அவனிடம், நீ ஏன் என்னிடம் முன்பே கூறவில்லை?'' என்று கேட்டபோது, அவன் கடுமையாக என்னிடம் நடந்து கொள்ளத் தொடங்கினான், அவனை நான் அடிக்க வேண்டியதாயிற்று. நான், “நான் குத்து சண்டையிடுவதை நிறுத்தின பின்பு இதை செய்ததே சிடையாது, ஆனால் நீ அறிய வேண்டுமென்று விரும்புகிறேன்'' என்று கூறி அவனுக்கு ஒரு குத்து கொடுத்து தரையில் வீழ்த்தினேன். அவனை மறுபடியும் தூக்கி நிறுத்தி, குத்து கொடுத்து தரையில் வீழ்த்தினேன். இப்படியாக மூன்று அல்லது நான்குமுறை செய்து, மலைப் பாகத்தில் உதைத்து தள்ளினேன். நான் திரும்பி வந்து, ” அதுதவறு'' என்று கூறி மறுபடியும் அவனிடம் சென்று அவனைத் தூக்கி நிறுத்தி அவனுடன் கைகுலுக்கி, ''உன் மேல் எனக்குக் கோபமில்லை, என்னிடம் நீ அப்படி பேசக் கூடாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்'' என்றேன். நான் திரும்பி வந்த போது, பரிசுத்த ஆவியானவர் கதவருகே நின்று கொண்டிருந்தார். அவர், ''முளை அடிக்கப்படும் போது, வேறு வழியாகச் செல். மேற்கு நோக்கிப் போ'' என்றார். எனக்குத் தேவை எல்லாமே இந்த புத்தகமே, இது ஒரு நல்ல பரிகாரம், (என் கஷ்டங்களினின்று விலக இது வழி காண்பிக்கின்றது.) ஆமேன். ''அந்த புத்தகம் வார்த்தை, வார்த்தை தேவன்.'' உங்கள் கஷ்டங்களினின்று வேறு வழியாக செல்ல, நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று அது உங்களுக்கு ஆலோசனை கூறும். 58மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, என் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள சந்தில் வசிக்கும் என் நண்பர் நகர நிலமளப்பவர் (City Surveyor) ஒரு முளை அடிக்கும் சத்தத்தைக் கேட்டேன். நான் அங்கு சென்று, ''மட் (Mud), என்ன விஷயம்?'' என்றேன். அவர் திரு. கிங் என்பவரின் மகன், என் நண்பர். அவர், ''பில்லி, அவர்கள் சாலையை விரிவுபடுத்துகின்றார்கள்'' என்றார். ''ஒருக்கால் அது அந்த பாலமாயிருக்கலாம்'' என்று நான் கூறினது உங்களுக்கு நினைவிருக்கும். நான் சகோ. உட்டிடம், ''உங்கள் சொத்தை வைத்திருங்கள். ஒருக்கால் அந்த பாலம் இந்த வழியாக வரக்கூடும்'' என்றேன், சாலை உடைக்கப்பட்டு, கற்களும், பாறைகளும் எல்லாவிடங்களிலும் எறியப்பட்டிருக்தன... நான், ''உங்கள் சொத்தை வைத்திருங்கள்'' என்றேன். பின்பு நான்... அது நடக்கப் போகின்றது என்று திரு. கிங் என்னிடம் கூறினார். நான் உள்ளே சென்று என் மனைவியிடம், ''தேனே, இதைக் குறித்து ஏதோ ஒன்று எழுதி வைக்கப்பட்டுள்ளது. அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பது. அது எங்கோ உள்ளது'' என்றேன். 59நான் உள்ளே சென்று என் புத்தகத்தைக் கொண்டு வந்தேன். ''அது நிறைவேறும்...'' என்று அதில் எழுதி வைக்கப்பட்டிருந்தது. எட்டு ஆண்டுகள் கழித்து அது நிறைவேறினது! அதை நான் கண்ட போது என் மனைவியிடம், ''தேனே, நாம் மேற்குக்கு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டதும் என்றேன்.'' அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, நான் காலை பத்து மணியளவில் அறையில் நின்று கொண்டிருந்த போது, தேவனுடைய ஆவிக்குள்ளானேன். அப்பொழுது ஒரு சிறு கூட்டம் புறாக்கள் பறந்து செல்வதைக் கண்டேன். அந்த சிறு பறவைகளை நான் உற்று நோக்கினேன். உங்களுக்கு அது ஞாபகமிருக்கும். நான் கூர்நுனிக் கோபுரவடிவில் ஏழு தூதர்கள் என்னிடம் வேகமாக வருவதைக் கண்டேன். அவர்கள், ''மேற்கே டூசானுக்கு செல், அதன் வட கிழக்கில் நாற்பது மைல் தொலைவில் இரு. நீ ஊமுள்ளை உன் துணிகளிலிருந்து எடுப்பாய்'' என்றனர். 60அங்கு உட்கார்ந்து கொண்டு என்னையே நோக்கிக் கொண்டிருக்கும் சகோ. ஃபிரட் சாத்மன் அன்று காலை என்னுடன் இருந்தார். எனக்கு எல்லாம் மறந்து விட்டது. நான், ''ஒரு வெடி வெடித்து, பூமியதிர்ச்சியைப் போல் தேசத்திலுள்ள எல்லாவற்றையுமே அசைத்தது, அதன் பிறகும் ஒரு மனிதன் எப்படி உயிர்வாழ முடியும் என்று எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினேன். நான் பயந்து போனேன். நான் பீனிக் ஸில் நின்று கொண்டிருந்தேன். இன்றிரவு என்னைக் கேட்டுக் கொண்டிருப்பவர் அனைவரும் அதற்கு சாட்சிகள், நான், ''ஐயன்மீர் இதுவா சமயம்?'' ''நாம் எங்குள்ளோம்?'' என்பதைக் குறித்து பிரசங்கித்தேன். நான் மேற்கே சென்றேன். உங்கள் அநேகரிடம் அந்த ஒலிநாடா இருக்கும். அது நிகழ்வதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே அது கூறப்பட்டதை நீங்கள் கேட்டீர்கள். 61என்ன நடக்கப் போகின்றது என்று வியந்து கொண்டே நான் மேற்கே சென்றேன். ஒரு நாள் கர்த்தரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் என் மனைவியிடம், ''தேனே, ஒருக்கால் என் வேலை முடிந்து விட்டிருக்கும்'' என்றேன். எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. நான், ''என் பணியை தேவன் முடித்து விட்டார் என்று நினைக்கிறேன். நான் பரம வீடு செல்கிறேன். நீ பில்லியையும், மற்ற பிள்ளைகளையும் கூட்டிக்கொள். தேவன் எப்படியாவது உனக்கு ஒரு வழியை உண்டு பண்ணுவார். நீ தேவனுக்கு உண்மையாக வாழு. பிள்ளைகள் பள்ளியில் படிக்கின்றார்களா என்று கவனித்துக்கொள், தேவனுடைய போதனைகளில் அவர்களை வளர்த்து வா'' என்றேன். அவள், ''பில்லி, அது உண்மையாவென்று உங்களுக்குத் தெரியாதல்லவா?'' என்றாள். நான், ''ஆம் ஆனால் அந்த வெடிக்குப் பிறகு ஒருவனும் உயிர் வாழ முடியாது'' என்றேன். ஒரு நாள் காலை கர்த்தர் என்னை எழுப்பி, “நீ சபினோ மலைக்கணவாய்க்கு (Sabino Canyon) சென்று, அதன் மேலேறு'' என்றார். நான் ஒரு காகிதத் துண்டையும் வேதாகமத்தையும் எடுத்துக் கொண்டேன். மனைவி, ''எங்கு போகின்றீர்கள்?'' என்று கேட்டாள். நான், ''எனக்குத் தெரியாது. நான் திரும்பி வந்த பிறகு கூறுகிறேன்'' என்றேன். 62நான் மலைக்கணவாய்க்கு சென்று, கழுகுகள் பறந்து கொண்டிருக்கும் இடத்திற்கு ஏறிச் சென்றேன். அங்கு நின்று கொண்டிருந்த ஒருமானை நான் கவனித்துக் கோண்டிருந்தேன். நான் ஜெபம் பண்ண முழங்கால் படியிட்டு, என் கைகளையுயர்த்தினேன். அப்பொழுது ஒரு பட்டயம் என் கையில் விழுந்தது. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். நான், ''இது என்ன? எனக்கு புத்தி மாறாட்டம் ஒன்றும் ஏற்படவில்லை. என் கையில் பளபளப்பான பட்டயம் இதோ உள்ளதே'' என்று நினைத்தேன். ''இந்த மலைக்கணவாயிலிருந்து அநேக மைல்கள் தூரம் வரைக்கும் ஜனங்கள் யாருமில்லையே. அது எங்கிருந்து வந்திருக்கும்?'' என்று எண்ணினேன். அப்பொழுது, ''அது ராஜாவின் பட்டயம்'' என்று கூறும் ஒரு சத்தத்தைக் கேட்டேன். நான், ''ராஜா பட்டயத்தைச் கொண்டு தான் ஒரு மனிதனுக்கு பட்டம் சூட்டுகின்றான்'' என்றேன் அந்த சத்தம் மறுபடியும், ''அது ஒரு ராஜாவின் பட்டயம் அல்ல, அது ராஜாவின் பட்டயம் (The King's Sword), தேவனுடைய வார்த்தை'' என்றது. அது மேலும், ''பயப்படாதே. அது மூன்றாம் இழுப்பு. அது உன் ஊழியத்தை உறுதிப்படுத்தும் ஒன்றாகும்'' என்றது. 63என்ன நடக்கப்போகிறதென்று அறியாதவனாய், நான் என் நண்பனுடன் வேட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவர் என்னை தொலைபேசியில் கூப்பிட்டார். அவர்தான் கர்த்தருடைய தூதன் உள்ள அந்த புகைப்படத்தைக் குறித்து குற்றம் கண்டு பிடித்தவர், அதை எடுத்தவர் அவரே அவருடைய மகனின் விஷயமாக நான் ஹவுஸ்டனுக்குப் போக வேண்டியிருந்தது. அவன் மரண வரிசையில் சென்று கொண்டிருந்து இன்னும் சில நாட்களில் கொல்லப்பட வேண்டியவனாயிருந்தான். இந்த மனிதன் என்னை அங்கு சந்தித்து அவருடைய கைகளை என் மேல் போட்டு, ''நான் குற்றம் கண்டு பிடித்த அதே மனிதன் என்னுடைய ஒரே மகனைக் காப்பாற்ற வந்திருக்கிறார் என்பதை எண்ணிப்பாருங்கள்'' என்றார். இரக்கம் காண்பிக்கும் சங்கம் (The humane Society) ஒரு உயிரை காப்பாற்றியதற்காக எனக்கு ஆஸ்கர் விருதை வழங்கினர். 64நான் திரும்பிச் சென்று, வேட்டைக்காக மலையின் மேல் சென்றேன். அங்கு சகோ. ஃபிரட்டும் நானும் ஒரு காலை நடந்து கொண்டிருந்த போது, ஏற்கனவே என் காட்டுப்பன்றி எனக்கு கிடைத்து விட்டது. அது எங்கு சென்றது என்று நான் பார்த்து விட்டேன். நான், ''சகோ. ஃபிரட், அதிகாலையில் அந்த மலையின் மேல் செல்லுங்கள். நான் மற்ற மலையின் மேல் செல்கிறேன். நான் அந்த காட்டுப்பன்றியை நோக்கி சுட்டு அதைக் கொல்ல மாட் டேன். அந்த பன்றிக் கூட்டம் அந்த வழியாக வருமானால், அவைகளுக்கு முன்னால் சுட்டு, அவைகளை திருப்பி விரட்டியடித்து விடுகிறேன்'' என்றேன். 65சகோ. ஃபிரட் அங்கு சென்றார், அங்கு காட்டுப் பன்றிகள் இல்லை. அவர் கையாட்டி சைகை காண்பித்ததை நான் கண்டேன். நான் மலைக்கணவாயில் இறங்கினேன். அவை ஆழமான பிளவுகள். அப்பொழுது தான் சூரியன் மேலே வந்து கொண்டிருந்தது. நான் சுற்றி மலையின் மறுபவத்தை அடைந்தேன், நான் தீகக்கதரிசனத்தைக் குறித்து ஒன்றுமே நினைக்கவில்லை. அங்கு நான் உட்கார்ந்து கொண்டு இளைப்பாறினேன். ''அந்த பன்றிகளுக்கு என்ன நேர்ந்தது?'' என்று நினைத்தேன். நான் பொறுக்கினேன்... இந்தியர்கள் உட்காருவது போல் நான் கால்களை மடக்கி உட்கார்ந்து கொண்டு, என் மேல் ஆடையின் (Overall) கால் பாகத்தை நோக்கின போது ஊமுள் அங்கிருந்தது. அதை நான் எடுத்தேன். நான், “இது வினோதமாயுள்ளதே! இதோ நான் டூசானுக்கு நாற்பது மைல் வடகிழக்கே இருக்கிறேன். என் சிறு பையன் ஜோசப் அங்கு உட்கார்ந்து கொண்டு எனக்காக காத்துக் கொண்டிருக்கிறான்'' என்றேன். நான் நோக்கின போது, ஒரு கூட்டம் காட்டுப் பன்றிகள், மலையின் மேல், நான் இருந்த இடத்திலிருந்து ஆயிரம் கெஜம் தூரத்தில் வருவதைக் கண்டேன். நான் ஊமுள்ளை கீழே போட்டேன். நான், ''அவைகளைப் பெறுவனே, நான் சகோ. ஃபிரட்டை கூப்பிடுவேன். இந்த வழியாக எப்படி வருவது என்று ஒரு காகிதத் துண்டை தொங்கவிட்டு காண்பிப்பேன். சகோ. ஃபிரட்டை இங்கு வர வழைப்பேன்'' என்றேன். நான் மலையின் மறுபக்கத்தில், என்னால் இயன்றவரை வேகமாக ஓடத் தொடங்கின போது, திடீரென்று யாரோ என்னை சுட்டுவிட்டார்கள் என்று நினைத்தேன். அப்படிப்பட்ட ஒரு வெடி சத்தத்தை நான் கேட்டதேயில்லை. அது தேசம் முழுவதையும் அசைத்தது. அப்படி நேர்ந்த போது, எனக்கு முன்பாக ஏழு தூதர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். 66நான் சகோ. ஃபிரட்டையும், மற்றவர்களையும் சற்று கழித்து சந்தித்தேன். அவர், ''அது என்ன?'' என்று கேட்டார். நான், ''அது தான் அது'' என்றேன். ''நீர் என்ன செய்ய போகின்றீர்?'' ''வீடு திரும்புவேன். ஏனெனில், கர்த்தர் உரைக்கிறதாவது வேதாகமத்தில் இத்தனை ஆண்டுகளாக ஸ்தாபனங்களுக்கும், மற்றவர்களுக்கும் மறைக்கப்பட்டிருந்த ஏழு பரம ரகசியங்களை தேவன் ஏழு முத்திரைகளைத் திறந்து வெளிப்படுத்தித் தரப் போகின்றார்'' என்றேன். அந்த வட்டம் ஒரு மூடு பனியைப் போல் உயர எழும்பினது. அது அப்படி செய்த போது, அது மலைக்குச் சென்று அது வந்த வழியாகவே மேற்கு திசையில் வட்டமிடத் தொடங்கினது. சிறிது கழிந்து, விஞ்ஞானம் அதை முப்பது மைல் உயரத்தில், இருபத்தைந்து மைல் விட்டம் அளவில் கூர் நுனிக்கோபுர வடிவில் வட்டமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டது. 67அன்றொரு நாள் அங்கு நின்று கொண்டு, அந்த படத்தை வலது பக்கம் திருப்பின் போது, ஏழு சபையின் காலங்களில் இயேசு காணப்பட்டவிதமாக அது இருந்தது. தலையில் வெள்ளை தலை அங்கியை (wig) அணிந்து, சகல அதிகாரமும் கொண்ட தேவனாக. அவர் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறார். அவரே எல்லா நித்தியத்துக்கும் பிரதானமான நீதிபதியாயிருந்து, அங்கு நின்று கொண்டு, இந்த மணீ நேரத்துக்கான செய்தியை உறுதிப்படுத்தினார். சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும்! இதெல்லாம் என்ன? இது என்ன? 68நான் மேற்கே சென்றேன். அதே மலையின் மேல் பாங்க்ஸ் உட்டுடன் கடந்து சென்று கொண்டிருந்த போது, ''ஒரு கல்லை மேலே எறி. திரு. உட்டிடம், கர்த்தர் உரைக்கிறதாவது, நீங்கள் தேவனுடைய மகிமையைக் காண்பீர்கள், என்று கூறு'' என்றார். அடுத்த நாள் அங்கு நின்று கொண்டிருந்த போது, ஒரு சுழல் காற்று கீழே இறங்கி வந்து, மலைகளைப் பெயர்த்தது. கற்கள் பறந்து சென்று, என் தலைக்கு மேல் மூன்று அல்லது நான்கு அடி உயரத்தில் மரங்களின் மேல் பாகத்தை வெட்டினது. மூன்று பெரிய வெடிப்புகளை அது உண்டாக்கினது. சகோதரர் ஓடி வந்தனர். அங்கு ஏறக்குறைய பதினைந்து பேர்கள் - போதகர்களும், மற்றவர்களும் நின்று கொண்டிருந்தனர். அவர், “அது என்ன?'' என்று கேட்டார். ''அது என்ன?'' நான், ''நியாயத்நீர்ப்பு மேற்கு கரையைத் தாக்குகின்றது'' என்றேன். 69அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, பூமியதிர்ச்சி அலாஸ்காவை திட்டத்தட்ட மூழ்கடித்தது. அரிசோனாவிலுள்ள கோரனோடாகாட்டில், சூரியன் அஸ்தமன மலையின் மேல் (Sunset Mountain) காணப்பட்ட வெளிச்சம் என்ன? அங்கு நடந்த இந்த வினோதமான சம்பவம் என்ன? அதன் விளைவாக, ஜனங்கள் மேற்கிலிருந்து கிழக்குக்கு காரோட்டி சென்று, அது தாக்கின அந்த இடத்தைச் சுற்றிலும் இருந்த கற்களைப் பொறுக்கினார்கள்; வெடியின் காரணமாக பெயர்ந்து வந்த அந்த கற்கள் ஒவ்வொன்றும் மூன்று முனைகளைக் கொண்டதாயிருந்தன (மூவரும் ஒன்றாயிருக்கின்றனர்.) அவை தேசமெங்கிலும், காகிதம் பறக்காதபடிக்கு உபயோகிக்கப்படும் பொருட்களாக (Paper weights) மேசைகளை அலங்கரிக்கின்றன. கோரனோடோ காட்டிலுள்ள சூரிய அஸ்தமன மலையின் மேல் நடந்த இந்த வினோதமான காட்சி என்ன? 70ஜுனியர் ஜாக்ஸன் இதை கேட்டுக் கொண்டிருப்பார். ''சூரியன் அஸ்தமிக்கும் திசையை நோக்கிச் செல்வதாக'' அவர் கண்ட சொப்பனம் ஞாபகமுள்ளதா? அதற்கு நான் அர்த்தம் உரைத்தேனே! இது, ''சூரிய அஸ்தமன'' மலையில் நிகழ்ந்தது! இது சாயங்கால நேரம், சூரியன் அஸ்தமிக்கும் நேரம். சூரிய அஸ்தமன செய்தியின் மூலம் சரித்திரம் அஸ்தமனமாகி, தீர்க்கதரிசனம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. கோரனோடா காட்டிலுள்ள சூரிய அஸ்தமன மலையின் மேல் சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும். அது டூசானுக்கு நாற்பது மைல் வடக்கில் உள்ளது. வரை படத்தை வாங்கி சூரிய அஸ்தமன சிகரம் (Sunset Peak) எங்குள்ளது என்று பாருங்கள். அந்த இடத்தில் தான் அது சம்பவித்தது. அன்றொரு நாள் வரைக்கும் அதை நான் அறிந்திருக்கவில்லை. 71மரணத்தைக் காண முடியாத எல்லாமே தொடர்ச்சியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறது. அது நடக்கத் தொடங்கின முதற்கொண்டு, இயேசு நம்மை பார்த்துக் கொண்டு நின்று கொண்டுள்ள புகைப்படம் வரைக்கும்; இப்பொழுது சரியாக சூரிய அஸ்தமன மலையின் மேல் சூரிய அஸ்தமன வெளிச்சம். சாயங்கால வெளிச்சம் வந்து விட்டது. தேவன் தம்மை உறுதிபடுத்துகின்றார். அது என்ன? தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்னும் உண்மையாகும். அந்த வெள்ளை. ''எத்தனை பேர், நாம் வெளிப்படுத்தல் முதலாம் அதிகாரத்தில் பேசினவிதமாக அவருடைய தலையின் மேல் இருந்த தலை அங்கியைக் கண்டீர்கள்?'' பாருங்கள், சகல அதிகாரத்தையுமுடைய பிரதான தேவன்! வேறே சத்தமில்லை, வேறே தேவன் இல்லை, வேறு ஒன்றுமில்லை. ''தேவத்துவம் நம் சரீரப் பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்திறது.'' தூதர்களே அவருடைய தலை அங்கி, ஆமென். 72சூரிய அஸ்தமன மலையில் நிகழ்த்தது? என்ன தேவன் தமது வார்த்தையை உறுதிப்படுத்துகிறார். இந்த சந்தடி எல்லாம் அதைக் குறித்துதான். கவனியுங்கள், அது வெளிப்படுத்தல்.10:1-7 முடிய வாக்களிக்கப்பட்டுள்ள வார்த்தையை தேவன் நிறைவேற்றுதலாம். ''ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிற போது தேவரக சியம் நிறைவேறும்.'' வெளிப்படுத்தல்.10:1-7 உரைக்கும் மறைக்கப்பட்ட இரகசியம், கடைசி சபை காலத்துக்கு அளிக்கப்படும் கடைசி செய்தி, இந்த காலத்தில் அப்படியே நிறைவேறுகின்றது. பரி. லூக்கா;17:30, ''மனுஷகுமாரன்வெளிப்படும் நாளில்.'' ''கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள்'' (மத்;24:24). ஜனங்கள் இன்னும் சந்தேகத்தில் இருக்கின்றனர். சபையும், வழக்கம் போல், குழப்பமுற்றுள்ளது. 73டூசான் முழுவதிலும் விஞ்ஞானம்; அவர்கள் இதைக் குறித்து கட்டுரைகள் எழுதி செய்தித் தாள்களில் வெளியிடுகின்றனர். லெம்மன் மலையின் மேல்; அந்த பெரிய புகைப்படம் எடுக்கும் கருவிகள், நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து அது மேலே எழும்பிச் சென்றதை காணவில்லை. அது மேற்கு நோக்கி மிதந்து சென்று, காலம் முடிந்து விட்டது என்பதைக் காண்பித்தது. அது வேறெங்கிலும் சிறிதளவும் கூட செல்ல முடியாது. அது மேற்கு கரைக்கு சென்றது. அது போன வழியில் எல்லாம் நியாயத்தீர்ப்பு தாக்கினது. அது பீனிக்ஸின் மேல் சென்று, பின்பு அதைக் கடந்து பிரஸ்பாட், மலைகளைக் கடந்து மேற்கு கடற்கரைக்குச் சென்று... அவர்கள் எங்கே சென்றனர்? அலாஸ் காவுக்குள். அவள் இப்பொழுது இடி முழக்கமிட்டு, அந்த வழியாக சென்று கொண்டிருக்கிறாள். 74டூசானிலுள்ள வான்நிலை ஆராய்ச்சி நிலையங்கள் அனைத்தும் அது என்னவென கேட்டுக் கொண்டிருக்கின்றன, விஞ்ஞான ஆய்வுகள் அது என்னவென்பதை கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கின்றன. மூடு பனியோ, பனியோ உண்டாக முடியாத அவ்வளவு உயரத்தில் அது காணப்பட்டது. ''அதை செய்தது எது?'' ''அது எங்குள்ளது?'' இயற்கைக்கு மேம்பட்ட இந்த ஒளி வட்டம் புதிராயுள்ளது - சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்து வந்து, ''யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?'' என்று கேட்ட போது, அது அவர்களுக்கு புதிராக இருந்தது போல. அது என்ன? ''ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்'' (7.24:17) என்னும் வாக்குத்தத்தத்தை தேவன் நிறைவேற்றினதாகும். 75சாயங்கால நேரத்தில் சாயங்கால வெளிச்சம் உண்டாகும் என்று பரலோகத்தின் தேவன் வாக்களித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த பரமரகசியம் ''ஐயா, இது என்ன சமயம்?'' என்னும் தீர்க்கதரிசனமாக இருந்தது. இப்பொழுது அது சரித்திரமாகி விட்டது. வாக்குத்தத்தம் நிறைவேறி விட்டது. ஐயா, இது என்ன சமயம், இது என்ன கவர்ச்சி? தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுதல். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். ஜெபம் செய்வோம்: 76அன்புள்ள தேவனே, ஜனங்கனை நீண்ட நேரம் - நான் நினைத்ததைக் காட்டிலும் நீண்ட நேரம் பிடித்து வைத்து விட்டேன். தேவனே எங்குமுள்ள ஜனங்கள் புரிந்து கொள்ளும்படியாக ஏதோ ஒன்று கூறப்பட்டது அல்லது செய்யப்பட்டது என்று விசுவாசிக்கிறேன். கண்டு புரிந்து கொள்ளுதலின் மூலம் நீரே உண்மையான கிறிஸ்து என்பதை அவர்கள் விசுவாசிக்கவும், உறுதிப்படுத்தப்படும் வார்த்தைகள், அவருடைய வார்த்தை பரிபூரணமானது என்றும் அதன் காலத்தில் அது நிறைவேறுகிறது என்றும் அவர்கள் அறிந்துகொள்ளச் செய்யும். இப்பொழுதும், கர்த்தராகிய இயேசுவே, உலகம் சோதோமின் நிலையில் இருக்கும் என்று நீர் கூறியுள்ளீர் என்பதை மது சொந்த போரித்தைகளிலிருந்து அறிந்து கொள்கிறோம். இது எங்களுக்குத் தெரியும், அதை எங்களால் காண முடிகின்றது. ''சோதோமின் நாட்களில் இருந்தது போல'' என்று நீர் கூறியுள்ளீர். அந்நாளில் மூன்று தூதர்கள் புறஜாதிகவிடமும், யூத உலகிற்கும் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஒருவர் தேவனே - மனுஷ குமாரன். அவர் தம்மை மனித ரூபத்தில் வெளிப்படுத்தி ஒரு அற்புதத்தை செய்து, அவருக்குப் பின்னால் சாராள் கூடாரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று ஆபிரகாமுக்கு அறிவித்தார். முழு புறஜாதி உலகமும் சோதோமின் நிலையில் உள்ளபொழுது. அது மறுபடியும் நடக்கும் என்று நீர் கூறினீர். நாங்கள் இங்கு அடைந்துள்ளோம், கர்த்தாவே. கடைசி நாளில் எலியாவின் ஆவியை உலகிற்கு அனுப்புதல், பிள்ளைகளின் இருதயங்களை பிதாக்களிடத்திற்கு திருப்புதல் போன்ற மற்ற தீர்க்கதரிசனங்களும் அதையே உறுதிப்படுத்துகின்றன. தேவனே இந்நேரத்தில் நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறீர் என்னும் உம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்துமாறு ஜெபிக்கிறேன். பிதாவே, அதை அருளும். இவர்கள் எல்லோரும் உம்முடையவர்கள். இந்த ஆசீர்வாதங்களை அறிந்து, கூறப்பட்டவைகளை தேவனுடைய மகிமைக்கென உறுதிப்படுத்தி தருவீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 77வார்த்தையைப் பேசுவது மனிதன்; வார்த்தையை உறுதிப்படுத்துவது தேவன். ஒன்றைக் கூறுவது, ஒரு காரியம்; தேவன் அதை நிறைவேற்றுவது, வேறொரு காரியம். தேவனுக்கு எந்த வியாக்கியானியும் அவசியமில்லை, அவரே அவருடைய வியாக்கியானத்தைச் செய்து கொள்கிறார். இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால், வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க ஒரு ஜெப வரிசையை அமைக்க உத்தேசித்துள்ளோம். யாருமே, எந்த மனிதனும், எந்த ஸ்திரீயும், மானிடர் எவரும் எந்த தேவ தூதனும் உங்களைச் சுகப்படுத்த முடியாது என்று நமக்குத் தெரியும். ஏனெனில், தேவன் அதை ஏற்கனவே செய்து முடித்து விட்டார். அவர் அதை ஆயத்தப்படுத்தி விட்டார். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று அதை பெற்றுக்கொல்வதாகும். 78எந்த மனிதனும், எந்த தேவ தூதனும், யாருமே, தேவனும் கூட, உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்க முடியாது. அது ஏற்னவே செய்தாகிவிட்டது. இயேசு அதை சிலுவையில் செய்து முடித்தார். ஆனால், நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும், அதனால் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. பாருங்கள்? செய்யப்படக்கூடிய ஒன்றே ஒன்று, தேவன் இட்ட கட்டளையாகிய வியாதியஸ்தர்கள் மேல் விசுவாசிகள் கைகளை வைப்பதாகும். காலங்கள் தோறும் அவர்கள் எழுப்புதல் கூட்டங்களின் மூலம் அதை செய்து வருகின்றனர். அவர்கள் அதை, ''தேவன்'' என்று அழைத்து வந்தனர். 79ஆபிரகாம் பல அடையாளங்களைக் கண்டான். ஆனால், சோதோம் எரிந்து போவதற்கு முன்பு, ஆபிரகாம் தனது கடைசி அடையாளத்தை காணும் நேரம் வந்தது. அதுதான், தேவன் தம்மை மனித உருவில் வெளிப்படுத்தலாம். அதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? அது மறுபடியும் நடக்கும் என்று இயேசு கூறினாரா? 80இங்கு எத்தனை பேர்.... வானொலியிலும், தொலைபேசியிலும், தேசம் முழுவதிலும், நீங்கள் இன்னும் கேட்டு கொண்டிருந்தால், இப்பொழுது ஜெபத்துக்காக ஆயத்தமாகுங்கள், ஜெபித்துக் கொண்டிருங்கள், இங்கு கைக்குட்டைகளை வைத்திருக்கும் நீங்கள், என்ன செய்ய வேண்டுமென்று நான் தேவனுக்கு கட்டளையிட முடியாது, முடியவே முடியாது. அப்படி நான் முயற்சி செய்வதும் கூட என்னை விட்டு தூரமாயிருப்பதாக. அவர் இராஜாதிபத்தியம் உள்ளவர், அவர் விரும்புகிறதை அவர் செய்வார். நான் கீழ்ப்படிந்து, அவர் சொல்வதை மாத்திரமே செய்ய முடியும். 81இப்பொழுது சுவர்களைச் சுற்றிலும், ஜனங்கள் நின்று கொண்டிருக்கின்றனர். இங்கு மிக நெருக்கமாயுள்ளது. நாம் தேவனிடம், ''இது என்ன கவர்ச்சி?'' என்று கேட்டு, தேவன் நமது மத்தியில் அசைவாடி தமது திருமுகப்பிரசன்னத்தை காண்பிப்பாரா என்றும் (இங்கு அந்நியர்கள் இருக்கலாம்), அவருடைய ஆவி இங்குள்ளதென்று காண்பித்து, அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதையும் ருசுப்படுத்தி. நாம் ஒவ்வொரு வரும் இந்த இரண்டு பலமான செய்திகளைக் கேட்ட பின்பு) அவ்வாறு விசுவாசிக்கும்படி செய்வாரா என்றும் காண்போம். உங்களால் இவ்வாறு செய்ய முடியுமா? சரி. 82அப்படியானால் ஜெப வரிசையை அழைப்பதற்கு பதிவாக; இங்கு உஷ்ணமாயும், நெருக்கமாயும் உள்ளது, ஜனங்கள் சுவர்களில் சாய்ந்து நின்று கொண்டிருக்கின்றனர்... நான் இப்படியாக சுற்றும் முற்றும் பார்த்து, என்னுடைய ஜெப வரிசையை அழைக்கப் போகிறேன். நீங்கள் நின்று கொண்டு ஜெப வரிசையை அமைக்க இயலாது. நான் அவ்விதம் அழைக்கலாமா? வியாதியஸ்தர்கள் கட்டில்களில் படுத்திருக்கிறேனர். ஆகையால், நீங்கள் வரிசையாக நிற்க முடியாது. எனவே, நீங்கள் இருக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு, தேவனை விசுவாசியுங்கள்! உங்களிடம் ஜெய அட்டை இருக்குமானால்,அதை கையில் பிடித்துக் கொண்டிருங்கள். அப்படி செய்வது நல்லது. நீங்கள் வரிசையாக வருவீர்களானால், உங்கள் அருகாமையில் நாங்கள் வருவோம், ஆனால் நீங்கள் வரிசையாக வர வேண்டிய அவசியமில்லை. 83சென்ற ஞாயிறு இரவு, திரு. ஷெப்பர்ட் ஜெபவரிசையில் வரவில்லை. அவரிடம் ஜெப அட்டையும் இல்லையென்று நினைக்கிறேன். திரு. ஷெபர்ட் இன்றிரவு இங்கிருக்கிறாரா? அவர் எங்கே? இங்கிருக்கிறாரா? பின்னால் இருக்கிறார். திரு.ஷெப்பர்ட் உங்களிடம் ஜெப அட்டை இருந்ததா? இல்லை, அல்லவா? அவர் ஜெப அட்டை வைத்திருக்கவில்லை. அவர் மறுபடியும் இன்றிரவு இங்கு அமர்ந்திருக்கிறார், உட்கார அது நல்ல இடம், சகோ. ஷெப்பர்ட். 84நீங்கள் அங்கு இருக்க வேண்டும் என்பது மாத்திரமல்ல, உங்களுக்கு விசுவாசம் இருக்க வேண்டும். ஒரு ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தை தொட்டதை அவர் அறிந்து கொண்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் நேற்று, இன்றும், என்றும் மாறாதவராயிருக்கியர். ''உங்கள் பலவீனங்களைக் குறித்து, தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியராயிருக்கிறார்'' என்று எபிரேயர் நிருபம் கூறுகின்றது. அதை நீங்கள் நம்புகின்றீர்களா? அப்படியானால் விசுவாசியுங்கள்! அதை சந்தேகிக்காதீர்கள். வீசுவாசியுங்கள், அப்பொழுது அது நிறைவேறும். நீங்கள் மாத்திரம் விசுவாசித்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அதைப் பெற்றுக் கொள்வீர்கள். ஆனால், நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் விசுவாசிப்பீர்களா? நீங்கள் அனைவரும் விசுவாசிப்பீர்களா? இப்பொழுது எத்தனை பேர் விசுவாசிப்பீர்கள்? தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராய். நீங்கள் போர் போரென்று எனக்குத் தெரியாது. உங்களை போருமே எனக்குத் தெரியாது. உங்களை யாருமே எனக்குத் தெரிய வேண்டியது என்னுடைய பணியல்ல, இவைகளை அறிவது தேவனுடைய பணியாகும். ஆனால் நீங்கள் விசுவாசித்தால், தேவன், அதை செய்வார். இப்பொழுது விசுவாசிப்பீர்களா? 85அன்புள்ள தேவனே, நாங்கள் கலப்படமுள்ள கிறிஸ்தவர்களின் கூட்டம் அல்ல. நாங்கள் கொஞ்சப்படவும், குழந்தையைப் போல் நடத்தப்பட வேண்டியவர்களும் அல்ல. கர்த்தாவே அப்படிப்பட்டவர்கள் உமக்குக் கிடையாது. உமக்கு கரடுமுரடான விசுவாசிகள் உள்ளனர். தேவனுடைய பிரசன்னம் அப்படிப்பட்டவனின் இருதயத்தை அனல் மூட்டுகிறது - ஆ ரேமைப் போல்; அவன் தேவனை விசுவாசித்தான், உம்மை ஆனுக்கு வெளிப்படுத்தினீர். பின்பு அவனுக்கு நீர் பிரத்தியட்சமாகி, ஒரு அடையாத்தைக் காண்பித்தீர், அவன் உம்மை விசுவாசித்தான். அவனுடைய சரீரத்தை மறுபடியும் வாலிபனாக மாற்றினீர், அவனுடைய மனைவியின் சரீரத்தையும் கூட. அவனுலடய மனைவி அவனுடைய சரீரத்தின் ஒரு பாகமாயிருந்தாள். அப்பொழுது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பிள்ளை தோன்றினது. 86தேவனே, இந்த நாளில் அவ்வாறே இருக்கும் என்று நீர் வாக்களித்திருக்கிறீர். இந்த வார்த்தையை நீர் உறுதிப்படுத்தி தரவேண்டுமாறு மன்றாடுகிறேன். ஆண்டவரே, நியாயத்தீர்ப்பு புறஜாதி உலகமாகிய சோதோமைத் தாக்கி சோதோம் எரிவதற்கு முன்பு, சோதோமில் இருந்தது போல இருக்கும் என்னும் உம்முடைய அந்த ஒரு வாக்குத்தத்தத்தை மாத்திரம் இப்பொழுது நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். எனவே, நியாயத்தீர்ப்பு புறஜாதி உலகத்தை தாக்க காத்துக் கொண்டிருக்கிறது யூதர்களுக்கு உபத்திர காலத்தின் போது - யாக்கோபின் இக்கட்டுக் காலத்தின் போது - தானியேலின் எழுபது வாரங்களின் தொடர்ச்சியாக மூன்றரை ஆண்டுகள் அதிகம் இருக்கும். ஆனால், புறஜாதியாரின் காலபோ முடிவடைப் போகின்றது. செல்வதற்கு நேரம் வந்து விட்டது. நீர் பரந்த அடையாளத்தைக் கொடுத்து, அந்த மறுபடியும் வரும் என்று உரைத்தீர். தேவனே, அதை அருளும். நாங்கள் உமது கரங்களில் இருக்கிறோம். உமது சித்தத்தின்படியே எங்களுக்குச் செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 87இப்பொழுது, பயப்படாதீர்கள். நாம்பப்பட்டால் என்னவாகும்? இது தேவனுடைய இராஜாதிபத்தியத்தை சார்ந்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம். ஆனால் நான் ஏன் இதை செய்கிறேன்! அது நடக்கும் என்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் அது முடிவு பெறுகின்றது. அவர் அதை உங்களுக்கு முன்னால் அப்படி உறுதிப்படுத்துவாரானால், அவரை நீங்கள் விசுவாசிக்க முடியாதா என்ன? நிச்சயமாக விசுவாசிப்பீர்கள். இப்பொழுது விசுவாசமுடையவர்களாயிருங்கள். நான் சுற்று முற்றும் பார்த்து, பரிசுத்த ஆவியானவர் எங்கு நடத்துகின்றார் என்ன செய்யப் போகின்றார் என்பதைக் காணட்டும் அவர் என்ன செய்யப் போகின்றார் என்று எனக்குத் தெரியாது. அது அவனரப் பொறுத்தது. ஆனால் நீங்கள் மாத்திரம் விசுவாசமுடையவர்களாய் இருந்தால், ''விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும்.'' அதை விசுவாசிப்பவார் அனைவரும் கைகளையுயர்த்து, ''நான் விசுவாசிக்கிறேன்'' என்று கூறுங்கள். (சபையோர், ''நான் விசுவாசிக்கிறேன்'' என்கின்றார் - ஆசி). என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன். 88மூன்று என்னும் எண்ணிக்கை உறுதிப்படுத்துதலின் எண்ணிக்கையாயுள்ளது, அது சரியென்று உங்களுக்கு நிரூபிக்க அவர் மூன்று முறை இதை செய்வாரானால், நீங்கள் எங்கிருந்தாலும், யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நீங்கள் விசுவாசமுடையவர்களாயிருங்கள். அங்குமிங்கும் நடக்காதீர்கள். ஜெபித்துக் கொண்டிருக்கும் ஸ்திரீயே. உன்னை எனக்குத் தெரியாது. நீ உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்திலேயே இரு. இங்கு வர வேண்டியதில்லை. உன்னை எனக்குத் தெரியாது. நீ ஒரு சிறு பெண்ணை உன் கையில், இல்லை உன் மடியில் வைத்திருக்கிறாய். நான் உனக்கு முற்றிலும் அந்நியன், அந்த சிறு பெண் காண்பதற்கு சாதாரணமானவளாக, சுகமுள்ளவள் போல் இருக்கிறாள். அவள் அழகான சிறு பெண். சிவப்பு மயிர் கொண்டவள். இங்கிருந்து பார்த்தால், அவள் ஊனமுற்றவளைப் போல் இல்லை. அவளுக்கு என்ன கோளாறு என்று எனக்குத் தெரியாது. ஒருக்கால் அந்த பெண்ணுக்காக இராமல், உனக்காக இருக்கலாம். அந்த பெண்ணுடன் நீ உட்கார்ந்து கொண்டு ஜெபித்துக் கொண்டிருப்பதை நான் காண நேர்ந்தது. இயேசு அந்த ஸ்திரீயிடம், ''தாகத்துக்குத் தா'' என்று பேசிக் கொண்டிருந்தது போல, நானும் உன் ஆவியை கிரகித்துக் கொள்ள உன்னிடம் ஒரு நிமிடம் பேச வேண்டும். சகோ. ப்ரையன்டும் மற்றவர்களும் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை எனக்குத் தெரியும். அவர்களுக்கும் தேவைகள் இருக்கக் கூடும். ஆனால், நீயோ எனக்கு அறிமுகமாகாதவள். நான் தேவனுடைய தீர்க்கத்ரிசியென்று விசுவாசிக்கிறாயா? இன்றிரவு நீ கேட்டுக் கொண்டிருந்ததெல்லாம் உண்மை என்று விசுவாசிக்கிறாயா? நீ செய்த ஒரு காரியத்தையோ அல்லது நீ செய்யத்தகாத ஒரு காரியத்தை செய்ததாகவோ, அல்லது உனக்குள்ள கோளாறு என்னவென்றோ. அல்லது உன் விருப்பம் என்னவென்றோ தேவர் எனக்கு வெளிப்படுத்திதந்தால், அது உண்மையா இல்லையாவென்று உனக்குத் தெரியும் அல்லவா? அவர் அப்படி செய்வாரானால், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்னும் அவர் வார்த்தையையும், பரி.லூக்கா;17:30 வெளிப்படுகின்றது என்பதையும் அது உறுதிப்படுத்துமா? அதை நீ விசுவாசிக்கிறாயா? 89நாங்கள் அந்நியர்களென்று அந்த ஸ்திரீகையுயர்த்தி தெரிவித்தாள். உன்னை எனக்குத் தெரியாது. ஆனால், அவள் ஆவியுடன் தொடர்புகொள்ள நான் முயன்று கொண்டிருக்கிறேன் - ஒரு நபர். இங்கு அநேகர் இழுக்கின்றனர். இதை உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. இது அந்த சிறு பெண்ணுக்காக உனக்காக அல்ல. உனக்கு நரம்பு தளர்ச்சி உள்ளது. ஆனால், உன்னை தொல்லைப்படுத்திக் கொண்டிருப்பது அந்த நரம்பு தளர்ச்சி அல்ல. உன் இருதயத்தில் இப்பொழுது உள்ளது, அந்த சிறு பெண்ணே. அது என்னவென்று தேவன் என்னிடம் கூற முடியுமென்று விசுவாசிக்கிறாயா? அதை நீ விசுவாசிக்கிறாயா? அது உனக்கு உதவி செய்யுமா, அப்பொழுது நீ விசுவாசிப்பாயா? அது மூளையில் ஏற்பட்ட காயம். அது சரியா? உன் கையை அந்த சிறு பிள்ளையின் தலை மேல் வை, உன் கையை. 90அன்புள்ள தேவனே. ''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அவர்கள் சொஸ்தமாவார்கள்'' என்று நீர் கூறியுள்ளீர். இந்த ஸ்திரீ ஒரு விசுவாசி. அவளுடைய கை, பிள்ளையின் மேல் உள்ளது. அது சுகம் பெறுவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெயத்தை ஏறெடுக்கிறேன், ஆமென். இப்பொழுது, நீங்கள் எல்லோரும் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்; நிச்சயமாக! அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிற ஸ்திரீயை நானறிவேன். ஆனால், அவள் அந்த பக்கம் பார்த்துக் கொண்டிருப்பதால், அவளுடைய பெயர் எனக்கு உடனே ஞாபகம் வரவில்லை, பரவாயில்லை. அவளை நான் ஒரு நிமிடம் பார்க்க நேர்ந்தால், எனக்குத் தெரிந்து விடும். தோற்றத்தின் படி அவளை எனக்குத் தெரியுமே யொழிய, அவளுக்கு என்ன கோளாறென்று எனக்குத் தெரியாது. உனக்கு என்ன கோளாறென்று தேவன் எனக்குத் தெரியப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா? அது உனக்கு உதவி செய்யுமா? சர்க்கரை வியாதி. அது உண்மையானால், உன் கையையுயர்த்து. நிச்சயமாக! உனக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவளுக்கும் அதே வியாதிதான். அவள் எனக்கு அறிமுகமாகாதவள். மற்ற ஸ்திரீ யாரோ ஒருவருக்க - கால் ஊனமுள்ள ஒரு பிள்ளைக்காக - ஜெயம் செய்து கொண்டிருக்கிறான். நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், தேவன் அதை உங்களுக்கு அருளுவார். 91பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த மனிதன் சிகரெட்டு புகைப்பதை விட்டுவிட முயன்று வருகிறார். அந்த பழக்கத்தை தேவன் உன்னிடத்திலிருந்து எடுத்துப் போடுவாரென்று விசுவாசிக்கிறாயா? சரி. விசுவாசிக்கிறாயா? அதை நீ பெற்றுக் கொள்வாய். அந்த மனிதனை என் வாழ்க்கையில் நான் கண்டதேயில்லை. இங்கு ஒரு மனிதன் இருக்கிறார். கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கிற, இல்லை, சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கும் இந்த மனிதனின் மேல் கறுப்பு நிழல் தொங்கிக் கொண்டிருப்பதை பாருங்கள். அவர் மரித்துக் கொண்டிருக்கிறார். அவர் நிழலிடப்பட்டிருக்கிறார். அவருக்கு புற்று நோய் உள்ளது. அந்த மனிதனை எனக்குத் தெரியாது, அவரை நான் பார்த்தது கிடையாது. உங்களைக் குறித்து தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். அது உண்மை, ஐயா. உங்களைக் குறித்து ஏதாவதொன்றை தேவன் என்னிடம் கூற முடியுமென்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்ள அது உதவி செய்யுமா? நீங்கள் உங்கள் நண்பனால் இங்கு கொண்டு வரப்பட்டீர்கள். நீங்கள் இந்த இடத்தை சேர்ந்தவர் அல்ல, வேறெதோ ஒரு இடத்தை சேர்ந்தவர், அங்கு நிறைய தண்ணீர் உள்ளது. ஜனங்கள் அதில் மீன் பிடிப்பார்கள். ஆம், கென்டக்கியிலுள்ள ஆவ்பனி. அது உண்மை, விசுவாசியுங்கள், நீங்கள் சுகமடைந்து வீடு திரும்பலாம். அது உண்மையென்று விசுவாசியுங்கள். நீங்கள் விசுவாசித்தால், அது உங்களுக்காக செய்யப்பட்டு விட்டதென்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 92டென்னஸியைச் சேர்ந்த உனக்கு ஆஸ்துமா வியாதியுள்ள ஒரு பையன் இருக்கிறான். அவன் இங்கில்லை. அவன் சுகமடைவான் என்று விசுவாசிக்கிறாயா? அப்படியானால் உன் கைக்குட்டையைக் கொண்டு சென்று அவன் மேல் வை. நீ விசுவாசித்தால் அவன் சுகம் பெறுவான். டாக்டர் வேயிலுக்கு எதிரில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கும் அந்த ஸ்திரீ. அவளும் கறுத்த நிழலினால் நிழலிடப்பட்டிருக்கிறாள். அந்த ஸ்திரீயை என் வாழ்க்கையில் நான் கண்டதில்லை. அவளுக்கு புற்று நோய் உள்ளது அவளுக்கு ஒன்றும் செய்யாமல் போனால், அவள் மரித்துவிடுவாள். ஸ்திரீயே, அவர் உன்னை சுகப்படுத்துவாரென்று விசுவாசிக்கிறாயா? உன்னால் முடியுமா? நீ விசுவாசித்தால், சுகம் பெறுவாய். அவளுக்கு நேராக பின்னால் ஒரு ஸ்திரீ கைக்குட்டையால் வாயைப் பொத்திக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள் அவளுக்கு குடல் புண் உள்ளது, வியாதியாயிருக்கிறாள், உனக்கு அடிக்கடி வலி வருகின்றது. உனக்கு கண் அடைந்து போய் கீழே விழுகின்றாய். யாரோ ஒருவர் உன்னை இங்கு கொண்டு வந்திருக்கிறார். உனக்கு ஸ்திரீகளுக்கு ஏற்படும் கோளாறும் உள்ளது. நீ விசுவாசித்தால், சுகம் பெற்று வீடு திரும்பலாம். 93எனக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் வாலிபனே, நீ எனக்கு அந்நியன். நீ யார், போர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்தவனா? ஆம், நான் கூற நினைத்தது.... உனக்கு நான் அந்நியன், அது உனக்கு தெரியும், நீ எங்கள் தேசத்தை சேர்ந்தவனும் கூட இல்லை. ஆனால், தேவன் உன் இருதயத்திலுள்ள விருப்பத்தை உனக்கு அருளுவார் என்று விசுவாசிக்கிறாயா?உன் விருப்பம் என்னவென்று நான் கூறினால், அதை பெற்றுக் கொள்வாயா? நீ பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை நாடிக் கொண்டிருக்கிறாய். அது உண்மை. பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள், என் சகோதரனே. இதோ பின்னால் கருப்பு நிறமுள்ள ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அவருடைய இருதயத்தில் அவருடைய மனைவிக்காக ஒரு பாரம் குடி கொண்டுள்ளது அவள் இங்கில்லை. அவளுடைய பாதங்களில் கோளாறு உள்ளது. அவர் அவளை சுகப்படுத்துவாரென்று விசுவாசிக்கிறீர்களா? அப்படி செய்கிறீர்களா? நீர் இந்த இடத்திற்கு அந்நியர். நீர் கடலுக்கு அப்பால் இருக்கிறீர். நீர் ஜமய்காவை சேர்ந்தவர். நீர் யாரென்று தேவன் என்னிடம் கூறமுடியுமென்று விசுவாசிக்கிறீரா? திரு, பிராடன். விசுவாசிக்கிறீரா? இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். 94இந்த கடைசியில் திருமதி ரைட்டுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஸ்திரீயின் மனதில் பாரம் குடி கொண்டுள்ளது. அவள் தன் மகளுக்காக ஜெபம் செய்து கொண்டிருக்கிறாள். அவள் அறுவை சிகிச்சைக்காக காத்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்காக உன் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? அவளை நீ விசுவாசிக்கும்படி செய்தால், அவளுக்கு அறுவை சிகிச்சை அவசியமிருக்காது. என்னால் சுகப்படுத்த முடியாது. பின்னாலுள்ள சிறு குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில், கர்த்தருடைய ஆவியானவர், அல்லது தூதன், ஒரு வெளிச்சம் அசைவதைக் காண்கிறேன். இது ஒரு வாலிப பெண்ணின் மேல் தங்கியுள்ளது. அவளுக்கு ஆவிக்குரிய விஷயத்தில் சந்தேகம் உள்ளது. அந்த பெண்ணை எனக்கு தெரியுமென்று போல் தோன்றுகிறது. ஒரு வாலியப் பெண். அவளுக்கு ஸ்திரீகளுக்கு ஏற்படும் கோளாறும் உள்ளது. ஆம், அவள் பெயர் திருமதி வெஸ்ட். அவள் அலபாமாவைச் சேர்ந்தவள், திருமதி. டேவிட் வெஸ்ட், விசுவாசி, தேவன் அதை உனக்கு அருளுவார். 95''மனுஷகுமாரன் வெளிப்படும் நாளில் வெளிச்ச முண்டாகும்.'' அது நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவாக இராமல் போனால், அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். தேசம் முழுவதும் வானொலி, தொலை பேசியின் மூலம் இதை கேட்டுக் கொண்டிருப்பவர்களும், இந்த கூடாரத்திலுமுள்ளவர்களே, உங்களில் எத்தனை பேர் உங்கள் கையையுயர்த்தி, ''நான் ஒரு விசுவாசி'' என்று சொல்லக் கூடும். தேசத்திலுள்ளவர்களே, இங்குள்ள எல்லோருமே கையுயர்த்தியுள்ளனர். தேசத்தின் பல்வேறு பாகங்களினவர்களாகிய நீங்களும் கையுயர்த்தியிருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை - உங்கள் கண்களை இப்பொழுது மூடி, உங்கள் கைகளை உங்கள் அருகிலுள்ள யார் மேலாவது வையுங்கள். அவர்களுடைய கையைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஒரு கையை அவர்கள் தோளின் மேல் வையுங்கள். என் கைகளை நான் கைக்குட்டைகளின் மேல் வைத்திருக்கிறேன். இன்று என்ன செய்யப்பட்டுள்ளதென்று பாருங்கள். இப்பொழுது என்ன நடந்ததென்று பாருங்கள். திவ்விய அன்பினால் ஜொலிக்கும், அவருடைய பரிசுத்தமான முகத்தைக் காண, இந்த யாத்ரீகர்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! அவருடைய கிருபையில் அவர்கள் பங்கு கொண்டு, அவருடைய கிரீடத்தில் இரத்தினங்களாக பிரகாசிப்பார்கள். இப்பொழுது ஜெபிப்போம், நாம் ஜெபம் செய்வோம், எல்லா விடங்களிலும். 96அன்புள்ள தேவனே. நேரம் வந்து விட்டது. இந்த ஆர்த்தம் என்ன? தேவன் வார்த்தையை நிறைவேற்றுகிறார். கவர்ச்சி என்ன, கர்த்தாவே? தேவன் தமது பார்த்தையை நிறை வேற்றுதலே. தொலை பேசியின் மூலம் தேசம் முழுவதும் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் - ஒரு கரையிலிருந்து மறுகரை வரைக்கும் வடக்கிலிருந்து தெற்கு வரைக்கும். மேற்கிலிருந்து கிழக்கு வரைக்கும் உள்ள நூற்றுக்கணக்கானவர்கள் - ஒருவர் மேல் ஒருவர் தங்கள் கைகளை வைத்துள்ளனர். மெக்ஸிகோ, கனடா போன்ற இடங்களிலிருந்து வந்துள்ளவர் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். நாங்கள் ஒருவர் மேல் ஒருவர் கைகளை வைத்துள்ளோம், தேவன் தமது வார்த்தையை நிறைவேற்றுதல் அவர் சீமோன் பேதுருவிடம், ''உன் பெயர் சீமோன் நீ யோனாவின் குமாரன்'' என்று கூறினது போன்று, பரிசுத்த ஆவியினால் ஒருவன் எப்படி ஒரு மனிதனை அழைத்து அவ்வாறு கூற முடிகின்றது? ''உன் புருஷனை இங்கே அழைத்து வா.'' ''எனக்குப் புருஷன் இல்லை.'' ''நீ உள்ளபடி சொன்னாய், உனக்கு ஐந்து புருஷர் இருந்தார்கள்.'' அவள், ''இதை செய்ய மேசியா வருவாரென்று அறிவேன், ஆனால் நீர் யார்?'' என்றாள். அவர், ''நானே அவர்'' என்றார். 97நீர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறீர். ''நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால், நான் செய்து கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், இதைப் பார்க்கிலும் அதிக கிரியைகளைச் செய்வீர்கள். கடைசி நாட்களில் நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவன் பிள்ளைகளின் சிந்தைகளை; பிள்ளைகளின் இருதயங்களை வேதத்திலுள்ள அப்போஸ்தல உபதேசங்களுக்கு திருப்புவான். சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும்'' என்று நீர் வாக்களித்திருக்கிறீர். பரலோகத்தின் மகத்தான தேவனே, இதோ நாங்கள் இருக்கிறோம்! அந்த மணி நேரம் இங்குள்ளது! கைகள் ஜனங்களின் மேல் உள்ளன. சாத்தானே, நீ தோல்வியடைந்தாய், நீ ஒரு பொய்யன். தேவனுடைய ஊழியன் என்னும் முறையில் - ஊழியர்களாக - நீ தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஜனங்களை விட்டு வெளியே வா என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டளையிடுகிறோம். ஏனெனில், ''என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்'' என்று எழுதியிருக்கிறது. ஜனங்கள் எல்லோரும் விடுவிக்கப்படுவார்களாக அன்புள்ள தேவனே. அதை அருள்வீராக. கல்வாரி மலையில் நேர்ந்த கவர்ச்சியின் அந்த நாளில், எல்லா வியாதிகளையும், பிசாசின் கிரியைகளையும் தோற்கடித்த பரலோகத்தின் தேவன் நீரே. நீர் தேவனாயிருக்கிறீர். உமது தழும்புகளால் ஜனங்கள் குணமடைந்தனர் - அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 98தேவனே, இங்கு வைக்கப்பட்டுள்ள கைக்குட்டைகள் ஒவ்வொன்றும்; தேவனுடைய ஆவி இங்குள்ள போதே, இயேசு கிறிஸ்துவின் அபிஷேகம் ஜனங்களின் மேல் தங்கியுள்ள போதே; அவர் வாக்களித்த மகத்தான அடையாளங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. பூமி நடுங்குகின்றது, பூமியதிர்ச்சிகள் உண்டாகின்றன. வேதவாக்கியங்கள் நிறைவேறி வருகின்றன, சாயங்கால வெளிச்சம் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பாகங்களிலுள்ள விகவாசிகளின் சாரத்தின் பிரதிநிதியாக என் சரீரத்தை இந்த கைக்குட்டைகளின் மேல் கிடத்தி, பிசாசினிடம், ''இது வைக்கப்படும் ஒவ்வொரு வியாதியஸ்தரையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே விட்டு வெளியே வா'' என்று தேவனுடைய வார்த்தையின் கனத்துக்கென்றும், மகிமைக்கென்றும் கட்டளையிடுகிறேன். தேவனுடைய வார்த்தையாகிய நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 99இப்பொழுது, விசுவாசிகள் என்னும் முறையில் அமைதியாக, நிதான புத்தியோடு, தெளிவோடு, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சர்வவல்லமையுள்ள தேவனிடமிருந்து சுகமாக்குதலை பெற்றுக் கொள்வீர்களா? அப்படியானால், உங்கள் கையையுயர்த்துங்கள், தேசமெங்கும் உள்ளவர்களே, நீங்களும் உங்கள் கையையுயர்த்துங்கள். என்னால் காணமுடியும் வரை, இங்குள்ள ஒவ்வொருவரும் கையுயர்த்தியுள்ளனர் - உள்ளே, வெளியே உள்ளவர்களும், சன்னல்களிலும், கதவுகளிலும் சாய்ந்து கொண்டிருப்பவர்களும், குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருப்பவர்களும், சுற்றிலும் எல்லாவிடங்களிலும் ஜனங்கள் கையுயர்த்யுள்ளனர். அவர்கள் அதை ஏற்றுக் கொள்கின்றனர். சாத்தான் தோல்வியடைந்தான் இயேசு கிறிஸ்துவின் தழும்புகள் உங்களை குணமாக்கினது. இயோ கிறிஸ்துவின் பிரசன்னம், அவர் இன்று ஜீவிக்கிறார் என்பதையும் அவர் செய்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்பதையும் ருசுபடுத்துகிறது. ஆமென்! இவரை நான் விசுவாசிக்கிறேன். நீங்களும் அல்லவா? 100இப்பொழுது நாம் எழுந்து நிற்போம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், செய்யப்பட்ட அல்லது சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் நாம் ஏற்றுக் கொண்டு, முழு இருதயத்தோடும் நாம் அவரை தேசிக்கிறோம். நமக்குள்ளில் உள்ள எல்லாவற்றினாலும் அவரைப் போற்றுகிறோம். இன்றிரவு நீங்கள் வெவ்வேறு இடங்களிலுள்ள உங்கள் வீடுகளுக்குச் செல்லும் போது, கர்த்தர் உங்களுடன் செல்வாராக. உங்களுக்கு பரிசுத்த ஆவி இல்லாமலிருந்தால், தேவன் உங்களுக்குப் பரிசுத்த ஆவியைத் தந்தருளுவாராக. 101இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிராத ஒவ்வொரு மனிதனுக்கும், ஸ்திரீக்கும், பையனுக்கும், பெண்ணுக்கும்; இங்கு உடைகளும், குளமும் உள்ளது. இன்றைக்கு செய்ய முடிவதை நாளைக்குத் தள்ளிப் போடாதீர்கள். நாளை ஒருக்கால் அதில் தாமதமாகி இருக்கலாம். ''இன்றைக்கு இன்றைய நாளின் பாடு போதும்.'' இங்கு போதகர்கள் நின்று கொண்டு காத்திருக்கின்றனர், உடைகள் காத்திருக்கின்றன. எனவே சாக்கு போக்குக்கு இடமில்லை. நீங்களும் காத்திருக்கிறீர்களா? அப்படி காத்திருந்தால், நீங்கள் விசுவாசித்தால்... நீங்கள் எவ்வகையில் ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் - தெளிக்கப்பட்டோ, ஊற்றப்பட்டோ - அது தவறு, வெளிச்சம் வந்து விட்டது. வாருங்கள், விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியைப் பெற்றிராத நீங்கள் ஒவ்வொரு வரும், அவர் உங்களுக்கு வாக்களித்துள்ள பரிசுத்த ஆவியை முழு தெய்வீக வல்லமையுடனும், அன்புடனும் பெற்றுக் கொள்வீர்களாக. அது உங்களை அவருக்கும் புது சிருஷ்டியாக மாற்றட்டும். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. 102இப்பொழுது, அடுத்து ஞாயிறு காலை ஒன்பதரை மணி வரைக்கும்; அநேக ஆண்டுகளுக்கு முன்பு நாம் வழக்கமாக பாடின இந்த சிறு பாடலைப் பாடுவோம். குடும்ப ஜெயத்தை மறந்து விடாதீர்கள், இயேசு உங்களை அங்கு சந்திக்க விரும்புகிறார்; உங்கள் கவலைகளெல்லாம் போக்கிடுவார், குடும்ப ஜெபத்தை மறந்து விடாதீர்கள். இப்பொழுது நாம், ஒன்று சேர்ந்து பாடுவோம்: குடும்ப ஜெபத்தை மறந்து விடாதீர்கள், இயேசு உங்களை அங்கு சந்திக்க விரும்புகிறார்; உங்கள் கவலைகளெல்லாம் போக்கிடுவார், ஓ, குடும்ப ஜெபத்தை மறந்து விடாதீர்கள். இதை நாம், மறுபடியும் பாடும் போது, உங்கள் பக்கத்திலுள்ள யாத்திரீகர் ஒருவருடன் கை குலுக்குங்கள். குடும்ப ஜெபத்தை மறந்து விடாதீர்கள், இயேசு உங்களை அங்கு சந்திக்க விரும்புகிறார்; உங்கள் கவலைக்ளெல்லாம் போக்கிடுவார், ஓ, குடும்ப ஜெபத்தை மறந்து விடாதீர்கள். 103நீங்கள் அவரை நேசிக்கின்றீர்கள் அல்லவா? நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன், முந்தி அவர் என்னை நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை (இது தான் அந்த கவர்ச்சி) கல்வாரி மலையில். இதே கவர்ச்சி சூரிய அஸ்தமன மலையின் மேலும், நேபோ மலையின் மேலும், சீனாய் மலையின் மேலும் இருந்தது. வெவ்வேறு மலையுச்சி அனுபவங்கள், ஏழு. சரி, இப்பொழுது நாம் பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன்; முந்தி அவர் என்னை நேசித்ததால். சம்பாதித்தார் என் இரட்சிப்பை; கல்வாரி மரத்தில். அவரை நேசிப்பவர் அனைவரும், “ஆமென்'' என்று கூறுங்கள், அவர் உங்களுக்குச் செய்துள்ளதை நினைத்துப் பாருங்கள், யோசித்துப் பாருங்கள், இன்றிரவு நீங்கள் மது அருந்தும் இடத்தில் இருந்திருக்க கூடும். தேவனுடைய இரக்கத்திற்குப் புறம்பே இருக்க நேர்ந்தால், ஒருக்கால் நீங்களும், நானும் கல்லறையில் இருக்க நேர்ந்திருக்கும். அவர் உங்களுக்கு என்ன செய்துள்ளார்? ஓ, அவரை நேசிக்காமல் நாம் எப்படி இருக்க முடியும்? யார் என்ன கூறினாலும் பரவாயில்லை. அவரே முதன்மை ஸ்தானம் வகிக்க வேண்டும்! 104இப்பொழுது நாம் கண்களை மூடி, தலைகளை வணங்கி இதை பாடுவோம். அவருக்கு பாடல்கள் என்றால் பிரியம் - பாடல்கள் பாடுவதைக் கேட்க. இப்பொழுது, அவருக்கு நாம் பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன்; முந்தி அவர் என்னை நேசித்ததால். சம்பாதித்தார் என் இரட்சிப்பை; கல்வாரி மரத்தில். அவருடைய சமுகத்தில் நமது தலைகளும், இருதயங்களும் வணங்கியுள்ள இந்நேரத்தில், நமது கண்கள் கண்டவைகளுக்காகவும், நமது காதுகள் கேட்டவைகளுக்காகவும், தேவனுடைய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவைகளுக்காகவும், இன்றைக்காக அவர் நமக்கு அளித்துள்ள வாக்குத்தத்தங்களுக்காகவும் நாம் நன்றியுள்ளவர்களாயிருப்போமாக! கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. 105இன்றிரவு நமது மத்தியில் ஒரு விருந்தினர் (guest) வந்திருக்கிறார், அவருடைய பெயர் நெட் ஐவர்சன், முன்னாள் பிரஸ்பிடேரியன் போதகர். அவருடைய தந்தையும், சகோதரர்களும் பிரஸ் பிடேரியன் போதகர்களாக இருக்கின்றனர். அவர் இன்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதாக கேள்விப்படுகிறேன். அவர் ஒரு போதகர். அதுவும் சிறந்த போதகர். அவர் தேவனுடைய ஊழியன் என்று நான் விசுவாசிக்கிறேன், நீங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லும் போது, தேவனுடைய ஆசிர்வாதங்கள் உங்கள் மேல் தங்கியிருக்க வேண்டுமென்று ஜெபிக்கும்படியாக அவரை நான் கேட்டுக்கொள்ளப் போகின்றேன். சகோ. ஐவர்சன், நாங்கள் ஜெபத்தில் தலைவணங்கியுள்ள இந்நேரத்தில், முன்னால் வாருங்கள். சகோதரனே, கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.